ஆயுஷ்
azadi ka amrit mahotsav

யோகா நேரலை நிகழ்ச்சி - ஆயுஷ் அமைச்சகம் புதிய கின்னஸ் உலக சாதனை

प्रविष्टि तिथि: 14 JUN 2026 12:56PM by PIB Chennai

2026-ஆம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஆயுஷ் அமைச்சகம் இன்று (14.06.2026) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை நிகழ்த்தியுள்ளது. தனது அதிகாரப்பூர்வ ஆயுஷ் அமைச்சகத்தின் யூடியூப் சேனல் வழியாக நேரலையாக ஒளிபரப்பப்பட்ட ஒரு சிறப்பு உலகளாவிய இணையதள யோகா அமர்வில் 4,35,831 பார்வையாளர்கள் கலந்துகொண்டனர். இதன் மூலம், யூடியூப் நேரலை யோகா ஒளிபரப்பில் அதிக பார்வையாளர்கள் பங்கேற்ற புதிய கின்னஸ் உலக சாதனையை அது படைத்துள்ளது.

சர்வதேச யோகா தினமான 2026- முன்னிட்டு அமைச்சகத்தின் மக்கள் தொடர்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த சாதனை முயற்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் இந்தியா முழுவதிலும் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள யோகா பயிற்சியாளர்கள், மாணவர்கள், நிறுவனங்கள், தொழில் வல்லுநர்கள், ஆரோக்கிய ஆர்வலர்கள் ஆகியோர் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் பொது யோகா நெறிமுறைப்படி பயிற்சிகள் இடம்பெற்றது.

இதில் ஆயுஷ் அமைச்சகம் 4,35,831 சரிபார்க்கப்பட்ட பார்வையாளர்களைப் பதிவுசெய்தது. இதன் மூலம் 2024-ல் 2,46,252 பேருடன் படைக்கப்பட்ட முந்தைய கின்னஸ் உலக சாதனை முறியடிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2272625&reg=48&lang=1

***

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2272657) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Bengali , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam