மத்திய அமைச்சரவை
அவசரகால கடன் உத்தரவாதத் திட்டம் 5.0-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
प्रविष्टि तिथि:
05 MAY 2026 6:48PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அவசரகால கடன் உத்தரவாதத் திட்டம் (ECLGS) 5.0-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேற்கு ஆசிய நெருக்கடியின் காரணமாக ஏற்படக்கூடிய குறுகிய கால பணப்புழக்கப் பற்றாக்குறைகளைச் சமாளிப்பதற்காக, கடன் உத்தரவாதப் பாதுகாப்பை வழங்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மார்ச் 31, 2026 நிலவரப்படி, தங்களின் கணக்குகள் வழக்கமானதாக இருக்கும் பட்சத்தில், ஏற்கனவே செயல்பாட்டு மூலதன வரம்புகளைக் கொண்ட குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், பிற நிறுவனங்கள் இதில் பயன்பெறும்.
உத்தரவாதப் பாதுகாப்பு : குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு 100%-மும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் அல்லாத துறைக்கு 90%மும் உத்தரவாதப் பாதுகாப்பு.
உத்தரவாதக் கட்டணம் : இல்லை.
ஆதரவின் அளவு : நிதியாண்டு 2026-ன் நான்காம் காலாண்டில் பயன்படுத்தப்பட்ட உச்சபட்ச செயல்பாட்டு மூலதனத்தில் 20% வரை கூடுதல் கடன் (அதிகபட்ச வரம்பு ₹100 கோடி).
கடனின் காலம்:
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள்/குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் அல்லாதவற்றுக்கு : 1 வருடத் தற்காலிகத் தடைக்காலம் உட்பட, முதல் தவணை வழங்கப்பட்ட தேதியிலிருந்து 5 ஆண்டுகள்.
முன்மொழியப்பட்ட கடன் உத்தரவாதத் திட்டம், வணிகங்கள், குறிப்பாக குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், விமானத் துறை ஆகியவற்றின் கூடுதல் செயல்பாட்டு மூலதனத் தேவைகளை வங்கிகள், நிதி நிறுவனங்கள் பூர்த்தி செய்வதை உறுதிசெய்ய உதவும். இது தடையற்ற உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும்.
மேலும் விவரங்களுக்கு இது ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2258114®=3&lang=2
***
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2269992)
आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Khasi
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam