பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பான சாதனை படைத்துள்ள அசாம் மாநில மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 05 JUN 2026 11:42PM by PIB Chennai

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பான சாதனை படைத்துள்ளதற்காக, அசாம் மாநில மக்களுக்கு, குறிப்பாக, அம்மாநிலத்தின் 'பெண் சக்தி'க்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (05-06-2026) தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். நிலைத்தன்மை கொண்ட  பூமியை உருவாக்கும் நோக்கில், இது போன்ற முக்கிய முயற்சியில், அம்மாநிலத்தின் 'பெண் சக்தி' முன்னிலை வகித்து வருவதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"பாராட்டுதலுக்குரிய சாதனை. நிலைத்தன்மை கொண்ட பூமியை உருவாக்கும் நோக்கில், இதுபோன்ற முயற்சியில், முன்னிலை வகித்து வரும் அசாம் மாநில மக்களுக்கும், குறிப்பாக, அம்மாநிலத்தின் 'பெண் சக்தி'க்கும் வாழ்த்துகள்."

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269664&reg=3&lang=1

(Release ID: 2269664)

***

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2269733) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Gujarati