தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ரித்விக் கட்டக்கின் எட்டு சிறந்த திரைப்படங்கள் துல்லியமான 4கே தரத்தில் சீரமைக்கப்பட்டுள்ளது

प्रविष्टि तिथि: 03 JUN 2026 12:52PM by PIB Chennai

இந்தியாவின் வளமையான திரைப்படப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும், உலக அளவில் அதை முன்னெடுத்துச் செல்வதிலும் ஒரு சிறப்பான நடவடிக்கையாக, தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்தின்  கீழ் செயல்படும் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் – தேசிய திரைப்பட ஆவணக்காப்பகம் ஆகியவை புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் ரித்விக் கட்டக்கின் அனைத்து முழுநீளத் திரைப்படங்களையும் வெற்றிகரமாக 4கே தரத்தில் சீரமைத்துள்ளது.

இந்தத் தொலைநோக்குச் சிந்தனையாளரான இயக்குநரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், பிரிட்டிஷ் திரைப்பட நிறுவனத்துடன் இணைந்து, 2026 ஜூன் மாதத்தில் லண்டனில் உள்ள புகழ்பெற்ற பிஎஃப்ஐ சவுத்பேங்க் அரங்கில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திரைப்படத் தொகுப்புத் திருவிழாவை நடத்த தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் – தேசிய திரைப்பட ஆவணக்காப்பகம் திட்டமிட்டுள்ளது.

இந்த திரையிடல் நிகழ்வு, சர்வதேசப் பார்வையாளர்கள் ரித்விக் கட்டக்கின் புரட்சிகரமான கதை சொல்லும் பாணியையும், ஆழமான கலை நுணுக்கம் சார்ந்த பார்வையையும், அதன் மிகச்சிறந்த, துல்லியமான காட்சி வடிவத்தில் அனுபவிக்க ஒரு வாய்ப்பை வழங்கும்.

கட்டக்கின் திரைப்படங்களை சீரமைக்கும் இத்திட்டம், தேசிய திரைப்படப் பாரம்பரிய இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மிகவும் பாராட்டத்தக்க பணிகளில் ஒன்றாகும்.  

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268264&reg=3&lang=1

***

SS/IR/RJ/KR


(रिलीज़ आईडी: 2268324) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी , Bengali , Kannada , Malayalam