பிரதமர் அலுவலகம்
தெலங்கானா மாநிலம் உருவான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
02 JUN 2026 8:27AM by PIB Chennai
தெலங்கானா மாநிலம் உருவான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுமை கண்டுபிடிப்புகள், தொழில்முனைவு முயற்சிக்கு தெலங்கானா மக்கள் நன்கு அறியப்பட்டவர்கள் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், அம்மாநிலத்தின் பெருமைமிக்க கலாச்சாரம், துணிச்சல்மிக்க உறுதிப்பாட்டின் வரலாற்றைச் சுட்டிக்காட்டியுள்ளார். வளர்ச்சியடைந்த இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் தெலங்கானாவின் வளர்ச்சிக்கு மத்திய அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று கூறியுள்ள திரு மோடி, அம்மாநில மக்களின் சிறந்த உடல் ஆரோக்கியம், வெற்றி ஆகியவற்றுக்காக பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“தெலங்கானா மாநிலம் உருவான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு வாழ்த்துகள். புதுமை கண்டுபிடிப்புகள், தொழில்முனைவு முயற்சிக்கு தெலங்கானா மக்கள் நன்கு அறியப்பட்டவர்கள் ஆவர். இம்மாநிலம் அதன் பெருமைமிக்க கலாச்சாரம், துணிச்சல்மிக்க உறுதிப்பாட்டின் வரலாற்றுக்காக அறியப்படுகிறது. வளர்ச்சியடைந்த இந்தியாவின் நமது தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் தெலங்கானாவின் வளர்ச்சிக்கு மத்திய அரசு ஆதரவளிக்க உறுதிபூண்டுள்ளது. அம்மாநில மக்களின் சிறந்த உடல் ஆரோக்கியம், வெற்றி ஆகியவற்றுக்காக பிரார்த்திக்கிறேன்.”
***
(Release ID2267753)
SS/IR/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2267885)
வருகையாளர் எண்ணிக்கை : 12