பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

திறன் இந்தியா திட்டத்தின் கீழ் பயிற்சி முடித்தவர்களுக்கு பட்டங்களை வழங்கும் விழாவில் இளைஞர்களுக்கான பல்வேறு முன்முயற்சிகளை தொடங்கிவைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

प्रविष्टि तिथि: 04 OCT 2025 2:24PM by PIB Chennai

பீகாரின் மதிப்பிற்குரிய மற்றும் பிரபலமான முதலமைச்சர், திரு நிதிஷ் குமார் அவர்களே, எனது அமைச்சரவை சக உறுப்பினர்கள். திரு ஜூவல் ஓரம் அவர்களே, திரு ராஜீவ் ரஞ்சன் அவர்களே, திரு ஜெயந்த் சௌதரி அவர்களே, மற்றும் திரு சுகந்தா மஜும்தார் அவர்களே, பீகாரின் துணை முதலமைச்சர், திரு சம்ராட் சௌத்ரி அவர்களே திரு விஜய் குமார் சின்ஹா அவர்களே; பீகார் அரசாங்கத்தின் அமைச்சர்களே, எனது நாடாளுமன்ற சக உறுப்பினர். திரு சஞ்சய் ஜா அவர்களே பொது பிரதிநிதிகளே நாடு முழுவதும் உள்ள தொழில்பயிற்சி நிலையங்களிலிருந்து (ஐடிஐ) வந்துள்ள லட்சக்கணக்கான மாணவர்களே, பீகாரின் எண்ணற்ற மாணவர்கள் பெண்களே மற்றும் மாண்புமிகு தாய்மார்களே, பெரியோர்களேஈ ஆசிரியர்களே அனைவருக்கும் வணக்கம்.

 

சில ஆண்டுகளுக்கு முன்பு, நமது அரசாங்கம் தொழில் பயிற்சி நிலையங்களின் (ஐடிஐ-கள்) மாணவர்களுக்காக பெரிய அளவிலான பட்டமளிப்பு விழாக்களை நடத்தும் ஒரு புதிய பாரம்பரியத்தைத் தொடங்கியது. இன்று, இந்த பெருமைமிக்க பாரம்பரியத்தின் இன்னுமொரு அத்தியாயத்தை நாம் சாட்சியாகக் காண்கிறோம். பாரதத்தின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் நம்முடன் இணைந்திருக்கும் அனைத்து இளம் ஐடிஐ பயிற்சியாளர்களுக்கும் எனது வாழ்த்துகளை நான் தெரிவிக்கிறேன்.

 

எனது நண்பர்களே

இன்றைய விழா புதிய பாரதம் திறமைக்கு வழங்கும் முன்னுரிமையை அடையாளப்படுத்துகிறது இந்த முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பத்தில், நமது நாட்டின் இளைஞர்களுக்காக கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கான இரண்டு பெரிய புதிய முன்முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த பட்டமளிப்பு விழாவை ஏற்பாடு செய்வதன் பின்னணியில் இருந்த எண்ணம் என்னவெனில், நாம் உழைப்புக்கு மதிப்பளிக்காத வரையில் திறமையுடனும் திறனுடனும் உழைப்பவர்கள் பொது வாழ்க்கையில் அவர்கள் உண்மையிலேயே பெற வேண்டிய மரியாதையை ஒருபோதும் பெறமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் வேரூன்றியிருந்தது. அந்த மரியாதை இல்லாமல், அவர்கள் தங்களைத் தாழ்வாக உணரக்கூடும், அதைத்தான் நாம் மாற்ற முயல்கிறோம்.

 

இது நமது கூட்டு மனநிலையை மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு இயக்கமாகும் நாம் பெருமையுடன் 'ரமேவ ஜயதே என்றும், மேலும் ஸ்ரமேவ பூஜ்யதே என்றும் கூறுகிறோம், அதே மனப்பான்மையுடன்தான் நாம் நாடு முழுவதும் உள்ள அனைத்து ஐடிஐ பயிற்சியாளர்களிடமும் அவர்களுக்கு வேறு வழிகள் இல்லாததால் இங்கே வரவில்லை, மாறாக இதுவும் ஒரு பிரகாசமான எதிர்காலத்தை நோக்கிய ஒரு பாதையாகும் என்ற நம்பிக்கையை ஊட்ட விரும்புகிறோம். தேச நிர்மாணத்தில் திறமைக்கு ஒரு முக்கியமான பங்கு உள்ளது. எனவே, ஐடிஐ சகோதரத்துவத்தின் ஒவ்வொரு உறுப்பினரையும் மிகுந்த மரியாதையுடன் வாழ்த்துகிறேன் மற்றும் பாராட்டுகிறேன்.

 

இன்று, இரண்டு மேலும் முக்கியத்துவம் வாய்ந்த முன்முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. பிரதமரின் சேது திட்டத்தின் கீழ், ரூ.60,000 கோடி ஒதுக்கீட்டுடன், நமது ஐடிஐ-கள் இப்போது நேரடியாகவும் மிகவும் வலுவாகவும் தொழில்களுடன் இணைக்கப்படும். கூடுதலாக நாடு முழுவதும் உள்ள நவோதயா வித்யாலயாக்கள் மற்றும்

 

ஏகலைவா மாதிரி பள்ளிகளில் 1,200 திறன் ஆய்வகங்கள் திறந்துவைக்கப்பட்டுள்ளன.

 

நண்பர்களே,

 

இந்த விழாவின் நிகழ்ச்சி நிரல் முதலில் தயாரிக்கப்பட்டபோது. இந்த பட்டமளிப்பு விழாவை இங்கே உள்ள விஞ்ஞான் பவனில் நடத்துவதுதான் அசல் திட்டமாக இருந்தது எனினும், பழமொழியில் சொல்வதுபோல 'சோனே பே சுஹாகா அல்லது கேக்கின் மீதான ஐசிங் - இன்னும் மங்களகரமான ஒன்று நடந்துள்ளது. திரு நிதிஷ் குமார் அவர்களின் தலைமையில் இந்த கொண்டாட்டத்தை ஒரு பிரமாண்ட திருவிழாவாக மாற்றுவதற்கான எண்ணம் தோன்றியது. இதன் விளைவாக, இன்றைய நிகழ்வுகள் மத்திய அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஐடிஐ பட்டமளிப்பு விழா மற்றும் பீகாரின் ஏராளமான முன்முயற்சிகள் என இரண்டு பெரிய நிகழ்வுகளின் சங்கமமாக மாறியுள்ளது.

 

ன்று அதே மேடையிலிருந்தே. பீகாரின் இளைஞர்களுக்கு பல புதிய திட்டங்கள் மற்றும் திட்டப் பணிகள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பீகாரில் ஒரு புதிய திறன் பயிற்சி பல்கலைக்கழகம், வசதிகள் விரிவாக்கம். மற்ற பல்கலைக்கழகங்களில் புதிய இளைஞர்களுக்கு அதிகாரம் வழங்க இளைஞர் ஆணையத்தை நிறுவுதல், மற்றும் பாதுகாப்பான அரசு கடிதங்களின் ஆயிரக்கணக்கான வேலைகளை இளைஞர்களுக்கு வழங்கும் நியமன விநியோகம் ஆகியவை அடங்கும். இந்த முன்முயற்சிகள் அனைத்தும் பீகாரின் இளம் தலைமுறைக்கு ஒரு பிரகாசமான மற்றும் உத்தரவாதம் அளிக்கின்றன. மிகவும் வளமான எதிர்காலத்திற்கு

 

நண்பர்களே,

 

பெண்களின் சில நாட்களுக்கு முன்பு பீகாரின் வேலைவாய்ப்பு மற்றும் சுயசார்புக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பிரமாண்ட நிகழ்ச்சியில் பங்கேற்கும் சிறப்பினை நான் பெற்றேன்

 

அந்த நிகழ்வு லட்சக்கணக்கான நமது சகோதரிகளின் பங்கேற்பைச் சாட்சியாகக் சந்தர்ப்பம். இன்றைய கண்டது. இளைஞர்களின் அதிகாரமளிப்பை மையமாகக் கொண்ட பீகாரின் ஒரு மாபெரும் நிகழ்ச்சியாகும் இந்த நிகழ்வுகள் ஒன்றாகச் சேர்ந்து, பீகாரின் இளைஞர்கள் மற்றும் பெண்கள் இருவரின் வளர்ச்சிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு எவ்வாறு மிக உயர்ந்த முன்னுரிமை வழங்குகிறது என்பதை அதிகாரமளிப்புக்கும் நிரூபிக்கின்றன.

 

நண்பர்களே,

 

இணைக்கப்பட்டு, பாரதம் அறிவு மற்றும் திறமையின் நிலமாகும். இந்த அறிவுசார் வலிமைதான் நமது மிகப்பெரிய சொத்தாகும். அறிவும் திறமையும் அவற்றை நாட்டின் தேவைகளுடன் நிறைவேற்றுவதற்காக அர்ப்பணிக்கப்படும்போது. அவற்றின் சக்தி பன்மடங்காகப் பெருகுகிறது. இருபத்தியோராம் நூற்றாண்டு. நாம் உள்ளூர் திறமையை, உள்ளூர் வளங்களை, உள்ளூர் திறன்களை மற்றும் உள்ளூர் அறிவை நாட்டின் தேவைகளுக்கு ஏற்ப முன்னேற்ற வேண்டும் என்று கோருகிறது. ஆயிரக்கணக்கான ஐடிஐ-க்கள் இந்த செயல்முறையில் முக்கியமான பங்கு வகிக்கின்றன.

 

தற்போது. இந்த ஐடிஐ-களில் சுமார் 170 தொழில்கள் தொடர்பாக பயிற்சி வழங்கப்படுகிறது. கடந்த 11 ஆண்டுகளில், 1.5 கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்களும் இளம் பெண்களும் இந்த தொழில் பிரிவுகளில் பயிற்சி பெற்றுள்ளனர் அவர்களைப் பல்வேறு துறைகளின் தொழில்நுட்ப தகுதிகளுடன் இணைத்துள்ளது மிகவும் குறிப்பிடத்தக்கது ஏனெனில் இந்த திறன்கள் இளைஞர்களுக்கு அவர்களின் உள்ளூர் மொழிகளில் கற்பிக்கப்படுகின்றன. இதனால் கற்றல் அணுகக்கூடியதாகவும் தொடர்புடையதாகவும் இருக்கிறது என்பதை உறுதி செய்கிறது. இந்த ஆண்டிலும், பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அகில இந்திய தொழில் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இன்று, வெற்றிபெற்ற 45-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களை கவுரவிக்கும் சிறப்பினை நான் பெற்றுள்ளேன்.

 

நண்பர்களே,

 

இந்த வெற்றிபெற்ற பயிற்சியாளர்களில் பெரும் எண்ணிக்கையினர் கிராமப்புற பாரதத்திலிருந்து நமது நாட்டின் தொலைதூர மற்றும் ஒதுக்குப்புற மூலைகளிலிருந்து வருகின்றனர் என்பது எனக்கு மிகுந்த பெருமையான தருணமாகும். அவர்களைப் பார்க்கும்போது, நமக்கு முன்பு ஒரு சிறிய பாரதம் அமர்ந்திருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அவர்களில் நமது மகள்களும் உள்ளனர். மேலும் மாறுபட்ட திறன் கொண்ட தோழர்களும் உள்ளனர், அவர்கள் அனைவரும் தங்கள் முழுமையான கடின உழைப்பு மற்றும் உறுதிப்பாட்டின் மூலம் வெற்றியை அடைந்துள்ளனர்.

 

நண்பர்களே,

 

நமது ஐடிஐ-கள் தொழில்துறை கல்விக்கான சிறந்த நிறுவனங்கள் மட்டுமல்ல அவை ஒரு சுயசார்பு இந்தியாவின் பணிமனைகளும் கூட எனவே, அவற்றின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் எங்கள் கவனம் இருந்தபோதிலும், அவற்றின் தரத்தை தொடர்ந்து மேம்படுத்துவதற்கும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் 2014 வரை. பாரதத்தில் சுமார் 10,000 ஐடிஐ-கள் மட்டுமே இருந்தன. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும். நாடு முழுவதும் கிட்டத்தட்ட 5,000 புதிய ஐடிஐ-கள் நிறுவப்பட்டுள்ளன. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், சுதந்திரத்திற்குப் பிறகு 10,000 உருவாக்கப்பட்டன. கடந்த பத்து ஆண்டுகளில் நமது அரசின் முயற்சியால் கூடுதலாக 5,000 ஐடிஐ-கள் நிறுவப்பட்டுள்ளன. இன்று. நமது தொழில் பயிற்சி நிறுவன வலையமைப்பு. தொழில்துறையின் தற்போதைய மற்றும் எதிர்கால திறன் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தயார் செய்யப்படுகிறது தொழில்துறைக்கு இன்று என்ன வகையான திறன்கள் தேவை, மேலும் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அதற்கு என்ன தேவைப்படும். இந்த கேள்விகள் எங்கள் திட்டமிடலுக்கு வழிகாட்டுகின்றன. எனவே, தொழில்துறைக்கும் ஐடிஐ-களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முயற்சிகள்

 

இந்த திசையில், திறன்களை வேலைவாய்ப்பாக மாற்றும் பிரதமரின் சேது திட்டத்தைத் தொடங்குவதன் மூலம் இன்று நாம் இன்னுமொரு பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளோம். நாடு முழுவதும் 1.000-க்கும் மேற்பட்ட ஐடிஐ நிறுவனங்கள் இதிலிருந்து பயனடையும் இந்த திட்டத்தின் மூலம் ஐடிஐ-கள் புதிய மற்றும் நவீன இயந்திரங்களுடன் மேம்படுத்தப்படும் தொழில்துறை பயிற்சி நிபுணர்கள் இந்த நிறுவனங்களுக்கு வருவார்கள். மேலும் பாடத்திட்டம் தற்போதைய மற்றும் எதிர்கால சந்தைத் தேவைகளுக்கு ஏற்ப புதுப்பிக்கப்படும். ஒரு வகையில், பிரதமரின் சேது திட்டம் இந்தியாவின் இளைஞர்களை உலகளாவிய திறன் தேவைகளுடன் இணைக்கும் ஒரு பாலமாகச் செயல்படும்.

 

எனது இளம் நண்பர்களே,

 

சமீபத்திய காலங்களில் பாரதம் ஒப்பந்தங்களில் பல்வேறு நாடுகளுடன் அவர்கள் கையெழுத்திடும் போதெல்லாம். வலியுறுத்தும் முக்கிய ஒத்துழைப்புப் பகுதிகளில் ஒன்று. நமது நாட்டிலிருந்து திறமையான மனிதவளத்தை அவர்கள் எதிர் பார்க்கிறார்கள் என்பதை நீங்கள் கவனித்திருக்க வேண்டும். இது பாரதத்தின் இளைஞர்களுக்கு புதிய உலகளாவிய வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. ஏனெனில் உலகம் முழுவதும் உள்ள நாடுகள் நமது இளம் தலைமுறையின் திறமையையும் திறனையும் அங்கீகரித்து வருகின்றன

 

நண்பர்களே,

 

இன்று, பீகாரிலிருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்களும் இந்த நிகழ்ச்சியின் மூலம் நம்முடன் இணைந்துள்ளனர். ஒருவேளை இந்த தலைமுறை, இரண்டு அல்லது இரண்டரை தசாப்தங்களுக்கு முன்பு பீகாரின் கல்வி அமைப்பின் நிலையை முழுமையாக கற்பனை செய்து பார்க்க முடியாது. பள்ளிகள் அரிதாகவே திறக்கப்பட்டன. ஆசிரியர்களின் நியமனம் கிட்டத்தட்ட இல்லாமலேயே இருந்தது. எந்த பெற்றோர் தங்கள் குழந்தை தங்களின் சொந்த மாநிலத்திலேயே படித்து முன்னேற வேண்டும் என்று விரும்பமாட்டார்கள்? ஆயினும் சூழ்நிலைகளால், லட்சக்கணக்கான குழந்தைகள் கல்வியைத் தேடி பனாரஸ், டெல்லி மற்றும் மும்பை போன்ற நகரங்களுக்கு பீகாரை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டனர். அதுதான் பீகார் இளைஞர்களின் இடப் பெயர்வின் உண்மையான தொடக்கமாகும்

 

நண்பர்களே.

 

ஒரு மரத்தின் வேர்கள் அழுகலால் பாதிக்கப்பட்டிருக்கும்போது. அதை மீண்டும் உயிருடன் புத்துயிர் பெறச் செய்ய மிகப்பெரிய முயற்சி தேவைப்படுகிறது ஆர்ஜேடி அரசாங்கத்தின் தவறான ஆட்சி பீகாரை துல்லியமாக அத்தகைய நிலையில்தான் விட்டுச்சென்றிருந்தது அதிர்ஷ்டவசமாக, பீகார் மாநில மக்கள் திரு நிதிஷ் குமார் அவர்களிடம் ஆட்சியின் பொறுப்பை ஒப்படைத்தனர். மேலும் முழு தேசிய ஜனநாயக கூட்டணியும் எவ்வாறு ஒன்றிணைந்து உழைத்து மாநிலத்தின் தடம் புரண்ட அமைப்புகளை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டுவந்தது என்பதை நாம் அனைவரும் சாட்சியாகக் கண்டோம். இன்றைய நிகழ்வே அந்த மாற்றத்திற்கான சாட்சியாக விளங்குகிறது

 

நண்பர்களே,

 

இந்த திறன் பட்டமளிப்பு விழாவின் இந்த சந்தர்ப்பத்தில், பீகார் ஒரு புதிய திறன் பல்கலைக்கழகத்தை பெறுகிறது என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். திரு நிதிஷ் குமார் அவர்களின் தலைமையில் பீகார் அரசு, இந்த பல்கலைக்கழகத்திற்கு பாரத ரத்னா. ஜனநாயக காவலர் கர்பூரி தாக்கூர் அவர்களின் பெயரைச் சூட்டியுள்ளது. கர்பூரி தாக்கூர் அவர்களுக்கு ஜனநாயக காவலர் என்ற பட்டம் ட்ரோலிங்கில் ஈடுபடும் எந்த சமூக ஊடகக் குழுவாலும் வழங்கப்படவில்லை பீகாரின் ஒவ்வொரு குடிமகனின் அன்பு மற்றும் மரியாதையின்  மூலம் இந்த மரியாதையை அவர் பெற்றார், அவர்கள் அவரது சேவை மற்றும் தியாகத்தின் வாழ்க்கையைச் சாட்சியாகக் கண்ட பின்னர் அதை அவருக்கு வழங்கினர் பீகார் மக்களிடம் நான் சொல்ல விரும்புகிறேன் - தயவுசெய்து விழிப்புடன் இருங்கள் ஜன நாயக காவலர் என்ற பட்டம் கர்பூரி தாக்கூர் அவர்களுக்கே சொந்தமானது. ஆனால் இப்போதெல்லாம் சிலர் அந்த மரியாதையைக் கூட வசப்படுத்த முயற்சிக்கிறார்கள். மக்களால் அவருக்கு வழங்கப்பட்ட இந்த அங்கீகாரம் யாராலும் திருடப்படாமல் இருப்பதை பீகார் மக்கள் உறுதி செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் பாரத ரத்னா கர்பூரி தாக்கூர் அவர்கள் தமது முழு வாழ்க்கையையும் சமூகத்தின் சேவைக்கும் கல்வியின் பரவலுக்கும் அர்ப்பணித்தார் சமூகத்தில் மிகவும் பலவீனமான நபர் கூட முன்னேற உதவ வேண்டும் என்பதை அவர் தொடர்ந்து வலியுறுத்தினார் அவரது நினைவாக பெயரிடப்பட்ட இந்த திறன் பல்கலைக்கழகம் அதே கனவை நனவாக்குவதற்கான ஒரு சக்திவாய்ந்த ஊடகமாக மாறும்.

 

நண்பர்களே,

 

தேசிய ஜனநாயக கூட்டணியின் இரட்டை என்ஜின் அரசு பீகாரின் கல்வி நிறுவனங்களை நவீனமயமாக்குவதற்கு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது ஐஐடி பாட்னாவில் உள்கட்டமைப்பு விரிவாக்கம் ஏற்கனவே தொடங்கிவிட்டது இன்றும் கூட, பீகார் முழுவதும் பல முக்கிய கல்வி நிறுவனங்கள் நவீனமயமாக்கல் செயல்முறையைத் தொடங்கியுள்ளன. என்ஐடி பாட்னாவின் பிஹ்தா வளாகம் இப்போது நமது திறமையான மாணவர்களுக்காகத் திறக்கப்பட்டுள்ளது. கூடுதலாக பாட்னா பல்கலைக்கழகத்தில் புபேந்திர மண்டல் பல்கலைக்கழகத்தில் சாப்ராவில் உள்ள ஜெய பிரகாஷ் பல்கலைக்கழகத்தில் மற்றும் நாளந்தா திறந்தநிலைட் பல்கலைக்கழகத்தில் கல்விக்க புதிய உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

 

நண்பர்களே,

 

நல்ல நிறுவனங்களை உருவாக்கும் அதேநேரத்தில் திரு நிதிஷ் குமார் அவர்களின் தலைமையிலான அரசு பீகார் இளைஞர்களின் கல்வியின் நிதிச்சுமையையும் குறைத்து வருகிறது மாணவர்கள் உயர் கல்விக்கான கட்டணத்தைச் செலுத்துவதில் எந்த சிரமத்தையும் எதிர்கொள்ளாமல் இருக்க முயற்சிகள் கடன் அட்டைத் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன மாணவர் திட்டத்தின் மூலம், பீகார் அரசாங்கம் மாணவர்கள் உயர் கல்வியைத் தொடர உதவி செய்து வருகிறது. இப்போது மற்றுமொரு பெரிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த கடன் அட்டைத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன்கள் வட்டி இல்லாததாக மாற்றப்பட்டுள்ளன. மேலும் மாணவர்களுக்கான உதவித்தொகைகள் ரூ. 1,800 இலிருந்து ரூ.3,600 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. கல்விக்

 

நண்பர்களே,

 

இன்று. பாரதம் உலகின் மிக இளம் நாடுகளில் ஒன்றாக நிற்கிறது. மேலும் பீகார் அதன் மக்கள்தொகையில் இளைஞர்களின் மிக உயர்ந்த விகிதத்தைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாகும். எனவே, பீகாரின் இளைஞர்களின் திறன் வளரும்போது. அது இயற்கையாகவே முழு நாட்டின் வலிமையை மேம்படுத்துகிறது பீகாரின் இளம் தலைமுறையின் திறன்களை மேலும் மேம்படுத்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது ஆர்ஜேடி - காங்கிரஸ் ஆட்சிக் காலத்துடன் ஒப்பிடும்போது, பீகாரின் கல்வி வரவுசெலவுத் திட்டம் பல மடங்கு அதிகரித்துள்ளது. இன்று, பீகாரின் கிட்டத்தட்ட ஒவ்வொரு கிராமமும் குக்கிராமமும் ஒரு பள்ளியைக் கொண்டுள்ளது. பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையும் பன்மடங்கு பெருகியுள்ளது. சமீபத்தில், பீகாரின் 19 மாவட்டங்களில் கேந்திரிய வித்யாலயாக்களை நிறுவ மத்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது முன்பு ஒரு காலத்தில் பீகார், விளையாட்டிற்கான சர்வதேச அளவிலான உள்கட்டமைப்பையே கொண்டிருக்கவில்லை. இன்று, தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள் பீகாரிலேயே ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. நண்பர்களே

 

கடந்த இரண்டு தசாப்தங்களில், பீகார் அரசு மாநிலத்திற்குள்ளேயே 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளது கடந்த சில ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட பத்து லட்சம் பாதுகாப்பான அரசு இளைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன வேலைகள் பீகாரின் கல்வித் துறையை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்ளுங்கள் - ஆசிரியர்களின் நியமனம் முன்னெப்போதும் இல்லாத அளவில் நடந்துள்ளது கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும். பீகாரில் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியது மட்டுமல்லாமல் மாநிலத்தின் கல்வி முறையின் தரத்தையும் உயர்த்தியுள்ளது

 

நண்பர்களே,

 

பீகார் அரசாங்கம் இப்போது இன்னும் பெரிய இலக்குகளை நோக்கி செயல்பட்டு வருகிறது. திரு நிதிஷ் குமார் அவர்களும் தமது உரையில் குறிப்பிட்டபடி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் கடந்த இருபது ஆண்டுகளில் உருவாக்கப்பட்டதை விட இரண்டு மடங்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை மாநில அரசு இலக்காகக் கொண்டுள்ளது. தீர்மானம் தெளிவானது பீகாரின் இளைஞர்கள் பீகாருக்குள்ளேயே வேலைவாய்ப்பைக் கண்டுபிடிக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு அவர்களின் சொந்த தாயகத்திலேயே வேலை மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்.

 

நண்பர்களே,

 

இதுவும் பீகார் இளைஞர்களுக்கு இரட்டை போனஸின் காலமாகும். தற்போது, நாடு சரக்கு மற்றும் சேவை வரி சேமிப்பு திருவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. மோட்டார் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு பீகாரின் இளைஞர்களை மிகவும் மகிழ்விப்பதாக ஒருவர் என்னிடம் குறிப்பிட்டார். பலர் இந்த தன்தேராஸ் அன்று அவற்றை வாங்க கூடத் திட்டமிட்டுள்ளனர் பீகாரின் இளைஞர்களுக்கும் முழு நாட்டுக்கும் அவர்களுக்கு அத்தியாவசியமான பெரும்பாலான பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரி குறைப்பு குறித்து எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.

 

நண்பர்களே.

 

திறன்கள் வளரும்போது, நாடு தன்னிறைவு பெறுகிறது. ஏற்றுமதி உயர்கிறது. மேலும் வேலைவாய்ப்புகள் விரிவடைகின்றன. 2014-ஐந்து முன்பு இந்தியா வீழ்ச்சியடையக் கூடிய பொருளாதாரங்களில் ஒன்றாக கருதப்பட்டது அப்போது வளர்ச்சி மெதுவாக இருந்தது மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் பலவீனமாக இருந்தது இன்று பாரதம் உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக மாறுவதை நோக்கி சீராக நகர்ந்து கொண்டிருக்கிறது. உருவாக்கத்திலும் உற்பத்தியிலும் இது வேலைவாய்ப்பு எழுச்சியைக் குறிக்கிறது மொபைல் தொலைபேசிகள், மின்னணு சாதனங்கள், ஆட்டோ மொபைல் மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் காணப்பட்டுள்ளது முன்னெப்போதும் இல்லாத பெரிய தொழில்களிலிருந்து வளர்ச்சி நமது சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வரை, குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அனைத்து வளர்ச்சிகளும் நமது இளைஞர்களுக்கு பெரிதும் பயனளித்துள்ளன குறிப்பாக ஐடிஐ-களிலிருந்து பயிற்சியாளர்களுக்கு வரும் திறமையான கோடிக்கணக்கான முத்ரா திட்டமும் இளைஞர்களுக்கு அவர்களது சொந்த நிறுவனங்களைத் தொடங்க அதிகாரமளித்துள்ளது. சமீபத்தில், மத்திய அரசு பிரமரின் வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான வேலைவாய்ப்பு திருவிழாவை ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீட்டுடன் தொடங்கியது. இந்த முன்முயற்சி தோராயமாக 3.5 கோடி இளம் இந்தியர்கள் தனியார் துறையில் வேலைவாய்ப்பைப் பெற உதவும்.

 

நண்பர்களே,

 

நாட்டில் உள்ள ஒவ்வொரு இளைஞருக்கும் இது வாய்ப்புகளால் நிரம்பிய ஒரு காலமாகும். வாழ்க்கையில் பல விஷயங்களுக்கு மாற்றுகள் இருக்கலாம். ஆனால் திறமை, புதுமை மற்றும் கடின உழைப்புக்கு எந்த மாற்றும் இருக்க முடியாது. இந்த எல்லா குணங்களும் பாரதத்தின் இளைஞர்களிடம் உள்ளன. உங்கள் கூட்டு வலிமைதான் ஒரு வளர்ச்சியடைந்த பாரதத்தின் இயங்கு சக்தியாக மாறும் இந்த உறுதியான நம்பிக்கையுடன் இன்று என்னுடன் இணைந்திருக்கும் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஐடிஐ பயிற்சியாளர்களுடன், மாநில அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஏராளமான புதிய பரிசுகள் மற்றும் முன்முயற்சிகளுக்காக பீகாரின் அனைத்து இளைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் எனது உண்மையான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

***

AD/VK/PD


(रिलीज़ आईडी: 2256856) आगंतुक पटल : 27
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam