பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
மேற்கு ஆசியாவில் நிலவும் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து அமைச்சகங்களுக்கு இடையேயான அதிகாரிகளின் செய்தியாளர் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
22 APR 2026 5:42PM by PIB Chennai
மேற்காசியாவில் நிலவும் சூழலுக்கு இடையே மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து புதுதில்லி தேசிய ஊடக மையத்தில் இன்று ஊடகவியலாளர்களிடம் விளக்கப்பட்டது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் எரிபொருள் இருப்பு, கடல்சார் நடவடிக்கை, அப்பிராந்தியத்தில் இந்தியர்களுக்கு அளிக்கப்படும் உதவி, பல்வேறு துறைகளில் ஸ்திரத்தன்மையை பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விளக்கினர். இச்சந்திப்பின் போது வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தொழில்துறை மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறையின் புதிய தகவல்களை பகிர்ந்து கொண்டது.
தொழில்துறை செயல்பாடுகளின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்கும், விநியோக முறைகளை நிலைப்படுத்துவதற்கும் தொழில்துறை மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை ஒழுங்குமுறை மற்றும் எளிதாக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துகிறது
2026 மார்ச் 25 முதல் சிஎன்ஜி மற்றும் சிபிஜி விநியோக நிலையங்களுக்கான 467-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காணப்பட்டுள்ளன.
41 உயிரி எரிவாயு சிலிண்டர் நிரப்புதல் மற்றும் சேமிப்பு ஆலைகளுக்கு ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இது மாற்று மற்றும் தூய்மையான எரிபொருள் கிடைப்பதை ஊக்குவிக்கிறது.
தவறான பயன்பாட்டைத் தடுப்பதற்காக, விநியோக அங்கீகார குறியீடு (டிஏசி) அடிப்படையிலான விநியோகங்கள் சுமார் 94% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன
2026 மார்ச் 23 முதல் 20.08 லட்சத்திற்கும் அதிகமான - 5 கிலோ இலவச வர்த்தக சிலிண்டர்கள் விற்கப்பட்டுள்ளன
சுமார் 5.10 லட்சம் குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக 2.56 லட்சம் இணைப்புகளுக்கான உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது, அத்துடன் சுமார் 5.77 லட்சம் வாடிக்கையாளர்கள் புதிய இணைப்புகளுக்காகப் பதிவு செய்துள்ளனர்.
31 இந்தியர்களுடன் இந்திய கச்சா எண்ணெய் கப்பலான 'தேஷ் கரிமா', இன்று மாலை சுமார் 6 மணி அளவில் மும்பை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்ரவரி 28 முதல் அப்பிராந்தியத்திலிருந்து இந்தியாவிற்கு சுமார் 11.91 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2254573®=3&lang=1
***
TV/IR/KPG/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2254640)
வருகையாளர் எண்ணிக்கை : 15