பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
azadi ka amrit mahotsav

அசாமில் பிரம்மபுத்திரா நதியின் கீழ் தலா 2 வழிகள் கொண்ட இரட்டை குழாய் டிபிஎம் சாலையை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 14 FEB 2026 12:56PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, தேசிய நெடுஞ்சாலை 15-ல் உள்ள கோப்பூர் முதல் நுமாலிகர் வரையிலான 715-வது பிரிவில், பிரம்மபுத்திரா நதியின் கீழ் 15.79 கிலோ மீட்டர் சாலை மற்றும் ரயில் சுரங்கப்பாதை உட்பட, 4-வழி பசுமைப் பாதை இணைப்பைக் கட்டுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலை-15-ல் கோஹ்பூரிலிருந்து நுமாலிகர் வரை 4-வழி பசுமைப் பாதை இணைப்பாக பிரம்மபுத்ரா நதிக்குக் கீழே சாலை மற்றும் ரயில் சுரங்கப்பாதையுடன் இந்த திட்டத்தை உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் முதலாவது நீருக்கடியில் அமைக்கப்படும் சாலை மற்றும் ரயில் சுரங்கப்பாதையாகவும், உலகில் 2-வது சுரங்கப்பாதையாகவும் இருக்கும். இந்த திட்டம் அசாம், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, பிற வடகிழக்கு மாநிலங்களுக்கு குறிப்பிடத்தக்க பலன்களை வழங்கும். இது சரக்கு போக்குவரத்தின் செயல்திறனை அதிகரித்து, செலவைக் குறைத்து, பிராந்தியத்தில் சமூக-பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2227981&reg=3&lang=1

----

TV/PLM/EA


(வெளியீட்டு அடையாள எண்: 2243047) வருகையாளர் எண்ணிக்கை : 22