பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நாட்டின் 77-வது குடியரசு தினத்திற்கு வாழ்த்துத் தெரிவித்த உலகத் தலைவர்களுக்கு பிரதமர் நன்றி

प्रविष्टि तिथि: 26 JAN 2026 11:12PM by PIB Chennai

நாட்டின் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு உலகத் தலைவர்களின் வாழ்த்துகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

பூடான் பிரதமரின் சமூக ஊடக எக்ஸ் தள பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக, பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“இந்தியாவின் 77-வது குடியரசு தினத்திற்கு அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்த பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கேவுக்கும், பூட்டான் மக்களுக்கும் நன்றி. நமது நாடுகளுக்கு இடையிலான சிறப்பு நட்புறவும் தனித்துவமான உறவுகளும் தொடர்ந்து வலுவடைந்து வலுவடையட்டும்".

பிரான்ஸ் அதிபரின் சமூக ஊடக எக்ஸ் தள பதிவிற்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"இந்தியாவின் 77-வது குடியரசு தினத்தன்று அன்பான வாழ்த்துகளுக்காக எனது அன்பு நண்பர், பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மக்ரோனுக்கு நன்றி. விரைவில் உங்களை இந்தியாவில் வரவேற்பதற்கும், இந்தியா-பிரான்ஸ் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.”

சைப்ரஸ் அதிபரின் சமூக ஊடக எக்ஸ் தள பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக, திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"சைப்ரஸ் அதிபர் திரு நிக்கோஸ் கிறிஸ்டோடௌலிடிஸின் வாழ்த்துகளுக்கு நன்றி. சைப்ரஸ் ஒரு நெருங்கிய நட்பு நாடு. விரிவான ஒத்துழைப்பை வலுப்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இந்தியாவில் உங்களை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.”

"மாலத்தீவு அதிபரின் சமூக ஊடக எக்ஸ் தள பதிவிற்கு பதிலளிக்கும் வகையில் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"நன்றி மாலத்தீவு அதிபர் திரு முகமது முய்சு அவர்களே. இந்தியாவின் 77-வது குடியரசு தினத்தன்று உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. இரு நாட்டு மக்களின் நலனுக்காக நாம் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம். உங்களுக்கும் மாலத்தீவு நண்பர்களுக்கும் மகிழ்ச்சியான பண்டிகைக் காலம் அமைய வாழ்த்துகள்."

***

(Release ID: 2218947)

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2242091) आगंतुक पटल : 46
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam