பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை ஜனநாயகத்தை வலுப்படுத்தி, அரசியல் சாசன லட்சியங்களை நிலைநிறுத்தி, வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க ஊக்கம் அளிக்கிறது: பிரதமர்

இடுகை இடப்பட்ட நாள்: 25 JAN 2026 9:30PM by PIB Chennai

குடியரசு தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஆற்றிய ஊக்கமளிக்கும் உரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

அரசியல் சாசனத்தின் தனித்துவத்தை குடியரசுத் தலைவர் சரியாக எடுத்துரைத்துள்ளதாகவும், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் கூட்டு மனப்பான்மையை பாராட்டி இருப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார். ஜனநாயகத்தை வலுப்படுத்துதல், அரசியல் சாசன கொள்கைகளை நிலைநிறுத்துதல், வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டியெழுப்புதல் ஆகியவற்றில் தங்களது கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்த ஒவ்வொரு நபரையும் அவரது உரை ஊக்குவிக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"குடியரசு தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் மிகவும் ஊக்கமளிக்கும் உரையை நிகழ்த்தியுள்ளார். நமது அரசியல் சாசனத்தின் தனித்துவத்தை அவர் சரியாக எடுத்துரைத்துள்ளார். நமது நாட்டை முன்னோக்கி அழைத்துச் செல்லும் கூட்டு மனப்பான்மையைப் பாராட்டியுள்ளார். அவரது உரை, ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கும், அரசியல் சாசன லட்சியங்களை நிலைநிறுத்துவதற்கும், வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கும் தங்கள் கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்த ஒவ்வொரு நபரையும் குடியரசுத் தலைவரின் உரை ஊக்குவிக்கிறது."

***

(Release ID: 2218658)

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2242060) வருகையாளர் எண்ணிக்கை : 31