பிரதமர் அலுவலகம்
2026-ம் ஆண்டுக்கான பத்ம விருது அறிவிக்கப்பட்டவர்களுக்குப் பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
25 JAN 2026 7:16PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, தேசத்திற்கு சிறப்பான பங்களிப்பு செய்த அனைத்து பத்ம விருது பெறுபவர்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
பல்வேறு துறைகளில் விருது பெறுபவர்களின் சிறப்பான பணிகள், அர்ப்பணிப்பு, சேவை ஆகியவை சமூகத்தின் கட்டமைப்பை வளப்படுத்துவதாக பிரதமர் கூறியுள்ளார். இந்த கௌரவம், வரும் தலைமுறைகளைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
2026-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் தொடர்பான அறிவிப்பு குறித்த சமூக ஊடக எக்ஸ் தள பதிவிற்குப் பதிலளிக்கும் வகையில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“நமது தேசத்திற்கு சிறந்த பங்களிப்புகளை வழங்கிய அனைத்து பத்ம விருது பெறுபவர்களுக்கும் வாழ்த்துகள். பல்வேறு துறைகளில் அவர்களது சிறப்பான பணி, அர்ப்பணிப்பு, சேவை ஆகியவை நமது சமூகத்தின் கட்டமைப்பை வளப்படுத்துகிறது. இந்த கௌரவம், வரும் தலைமுறைகளை தொடர்ந்து ஊக்குவிக்கும்”.
***
(Release ID: 2218548)
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2242056)
வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க:
Telugu
,
Malayalam
,
Kannada
,
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati