பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜி20 தலைவர்கள் உச்சிமாநாட்டிற்காக தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கிற்கு பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 19 NOV 2025 5:38PM by PIB Chennai

தென்னாப்பிரிக்கா நடத்தும் 20-வது ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் பிரதமர் திரு நரேந்திர மோடி தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கிற்குச் செல்லவுள்ளார். 2025 நவம்பர் 21 முதல் 23 வரை இந்த மாநாடு நடைபெறுகிறது. இது உலகளாவிய தென்பகுதி நாட்டில் நடைபெறும் நான்காவது தொடர்ச்சியான ஜி20 உச்சி மாநாடாகும். இந்த உச்சிமாநாட்டில், ஜி20 செயல்திட்டத்தில் இந்தியாவின் கண்ணோட்டங்களைப் பிரதமர் முன்வைக்கவுள்ளார். உச்சிமாநாட்டின் மூன்று அமர்வுகளிலும் பிரதமர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று அமர்வுகள்:

i.     உள்ளடக்கிய, நிலையான பொருளாதார வளர்ச்சி

ii.    பேரிடர் அபாயக் குறைப்பு; பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளுதல்

iii.    அனைவருக்கும் நிலையான எதிர்காலம்: முக்கியமான கனிமங்கள்; செயற்கை நுண்ணறிவு

ஜி20 தலைவர்கள் உச்சிமாநாட்டிற்கு இடையே, பிரதமர் ஜோகன்னஸ்பர்க்கில் உலகத் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்னாப்பிரிக்கா நடத்தும் இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்கா (ஐபிஎஸ்ஏ) தலைவர்கள் கூட்டத்திலும் பிரதமர் பங்கேற்பார்.

----

(Release ID: 2192000)

TV/PLM/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2241193) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: Gujarati , English , Urdu , हिन्दी , Manipuri , Assamese , Bengali , Punjabi , Odia , Kannada , Malayalam