பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பாரம்பரிய மருத்துவம் குறித்த உலக சுகாதார அமைப்பின் இரண்டாவது உலகளாவிய உச்சிமாநாட்டின் நிறைவு விழாவின் முக்கிய அம்சங்களைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 19 DEC 2025 10:58PM by PIB Chennai

புது தில்லியில் நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் இரண்டாவது பாரம்பரிய மருத்துவம் குறித்த உலகளாவிய உச்சிமாநாட்டின் நிறைவு விழாவின் சில முக்கிய அம்சங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:

"பாரம்பரிய சுகாதாரப் பராமரிப்பில், நமது கவனம் தற்போதைய தேவைகளுக்கு அப்பால் விரிவடைய வேண்டும். எதிர்கால சந்ததியினரின் ஆரோக்கியத்தில் நாம் முக்கியப் பொறுப்பை வகிக்கிறோம்."

"பல நிலைகளில் தொடர்ச்சியான முயற்சிகள் மூலம், பாரம்பரிய மருத்துவம் ஒரு அர்த்தமுள்ள பங்கை வகிக்க முடியும் என்பதை இந்தியா நிரூபித்து வருகிறது."

பாரம்பரிய மருத்துவம் குறித்த உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய உச்சி மாநாட்டில் நடைபெற்ற கண்காட்சியில், உலகம் முழுவதிலுமிருந்து மூலிகை மருத்துவ முறைகள் காட்சிப்படுத்தப்பட்டன. இது நவீன சுகாதாரத் துறையில் அதன் பொருத்தத்தை எடுத்துக்காட்டுகிறது. @WHO"

பாரம்பரிய மருத்துவம் குறித்த இரண்டாவது உலகளாவிய உச்சி மாநாட்டில் அஸ்வகந்தா குறித்த நினைவு அஞ்சல் முத்திரையை வெளியிட்டேன். @WHO"

"உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸுடன் ஒரு சிறப்பான கலந்துரையாடலை நடத்தினேன். முழுமையான ஆரோக்கியம், நோய்த் தடுப்பு ஆகியவற்றில் பாரம்பரிய மருத்துவத்தின் மகத்தான ஆற்றலைப் பற்றி நாங்கள் விவாதித்தோம்." @WHO

***

(Release ID: 2206855)

TV/PLM/KR


(रिलीज़ आईडी: 2240794) आगंतुक पटल : 41
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam