பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உலக வானொலி தினம் மக்களுக்கான நம்பகமான குரலைக் கொண்டாடுகிறது பிரதமர்

प्रविष्टि तिथि: 13 FEB 2026 12:08PM by PIB Chennai

உலக வானொலி தினம் என்பது தொலைதூர கிராமங்களாக இருந்தாலும் சரி, பரபரப்பான நகரங்களாக இருந்தாலும் சரி, மக்களுக்கான நம்பகமான குரலாக இருக்கும் ஒரு ஊடகத்தைக் கொண்டாடும் நிகழ்வு என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். பல ஆண்டுகளாக, வானொலி சரியான தகவல்களைச் சரியான சரியான நேரத்தில் வழங்கி, திறமையை வளர்த்து, படைப்பாற்றலை ஊக்குவித்து வருகிறது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

மனதின் குரல் மூலம், நமது மக்களின் சமூக வலிமையை வெளிக்கொணர்வதில் வானொலியின் திறனை தாம் நேரடியாக அனுபவித்திருப்பதாக அவர் கூறியுள்ளார். இந்த மாத நிகழ்ச்சி பிப்ரவரி 22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் எனவும் இந்த நிகழ்ச்சிக்கான கருத்துகளை மக்கள் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"உலக வானொலி தினம் என்பது தொலைதூர கிராமங்களாக இருந்தாலும் சரி, பரபரப்பான நகரங்களாக இருந்தாலும் சரி, மக்களின் நம்பகமான குரலாக இருக்கும் ஒரு ஊடகத்தைக் கொண்டாடும் நிகழ்வாகும். பல ஆண்டுகளாக, வானொலி சரியான நேரத்தில் சரியான தகவல்களை வழங்கி, திறமையை பெருக்கி, படைப்பாற்றலை ஊக்குவித்து வருகிறது. இந்த ஊடகத்துடன் தொடர்புடைய அனைவரின் முயற்சிகளையும் அங்கீகரிக்கும் நாள் இது.

மனதின் குரல் மூலம், நமது மக்களின் சமூக வலிமையை வெளிக்கொணர்வதில் வானொலியின் திறனை நான் நேரடியாக அனுபவித்துள்ளேன். இந்த மாத நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 22 அன்று நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்கான உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்."

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2227378&reg=3&lang=1

***

TV/PLM/RK


(रिलीज़ आईडी: 2239518) आगंतुक पटल : 46
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , English , Urdu , Marathi , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam