பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலகளாவிய எரிசக்தி விநியோக இடையூறுகளை நிவர்த்தி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி நாடாளுமன்றத்தில் விளக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 12 MAR 2026 5:09PM by PIB Chennai

மேற்கு ஆசியாவில் நடந்து வரும் மோதலால் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளுக்குப் பதிலளிக்கும் விதமாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து மக்களவையில் இன்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி முக்கிய தகவல்களைப்  பகிர்ந்து கொண்டார்.

 

அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்கள் பின்வருமாறு:

 

இந்தியாவின் கச்சா எண்ணெய் விநியோக நிலை பாதுகாப்பாக உள்ளது.  ஹார்முஸ் வழங்கியதை விட பாதுகாக்கப்பட்ட அளவுகள் அதிகமாக உள்ளன. இந்த நெருக்கடிக்கு முன்பு, இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் தோராயமாக 45 சதவீதம் ஹார்முஸ் பாதை வழியாகவே சென்றன. பிரதமரின் சீரிய நடவடிக்கையால் அதே காலகட்டத்தில் தடைபட்ட ஜலசந்தி பாதை வழங்கியதை விட அதிகமான கச்சா எண்ணெய் அளவை இந்தியா பெற்றுள்ளது. மோதல் தொடங்குவதற்கு முன்பு 55 சதவீதமாக இருந்த ஹார்முஸ் அல்லாத கச்சா எண்ணெய் இறக்குமதி தோராயமாக 70 சதவீதமாக உயர்ந்துள்ளது.

பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் அல்லது எரிபொருள் எண்ணெய் பற்றாக்குறை ஏதும் இல்லை. பெட்ரோல், டீசல், விமான எரிபொருள், மண்ணெண்ணெய் மற்றும் எரிபொருள் எண்ணெயின் இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள சில்லறை விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன, இந்த தயாரிப்புகளுக்கான விநியோகச் சங்கிலிகளும் வழக்கம் போல் செயல்படுகின்றன. அனைத்து மாநிலங்களுக்கும் பொது விநியோக அமைப்புமுறையில் கூடுதல் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

முன்னுரிமை ஒதுக்கீட்டின் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் மேற்கொள்ளப்படுகிறது.  மேலும் இந்த நிலை உடனடித் தேவைக்கு அப்பாற்பட்டது. இந்தியா உள்நாட்டில் ஒரு நாளைக்கு சுமார் 90 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்ட் கன மீட்டர் இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்கிறது. வீடுகளுக்கு குழாய் மூலமான எரிவாயுவும் வாகனங்களுக்கான இயற்கை எரிவாயுவும் 100 சதவீத விநியோகத்தைப் பெறுகின்றன.

 

சமையல் எரிவாயுவைப் பொறுத்தவரையில், இந்தியா முன்னர் தனது தேவைகளில் சுமார் 60 சதவீதத்தை கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா மற்றும் குவைத் போன்ற வளைகுடா நாடுகளிலிருந்து இறக்குமதி மூலம் பூர்த்தி செய்து வந்தது, மீதமுள்ள 40 சதவீதம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது கொள்முதல் தீவிரமாக பன்முகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வளைகுடா ஆதாரங்களுடன், கூடுதலாக அமெரிக்கா, நார்வே, கனடா, அல்ஜீரியா மற்றும் ரஷ்யாவிலிருந்து சரக்குகள் பாதுகாக்கப்படுகின்றன. கடந்த 5 நாட்களில், சுத்திகரிப்பு உத்தரவுகள் மூலம் சமையல் எரிவாயு உற்பத்தி 28 சதவீதம் அதிகரித்துள்ளது, கொள்முதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

இந்தியாவின் சுமார் 33 கோடி குடும்பங்களுக்கு, குறிப்பாக ஏழைகள் மற்றும் பின்தங்கியவர்களுக்கு சமையல் எரிவாயுவை முன்னுரிமை அடிப்படையில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு விநியோகம் முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளது மற்றும் விநியோக சுழற்சி மாறாமல் உள்ளது. உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர்களுக்கான முன்பதிவு முதல் விநியோகம் வரையிலான காலம் தொடர்ந்து 2.5 நாட்களாகவே உள்ளது. மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தடையற்ற விநியோகத்திற்கு முக்கியத்துவம் உறுதி செய்யப்படுகிறது. விநியோகஸ்தர் மற்றும் சில்லறை விற்பனை அளவில், பதுக்கல் மற்றும் தேவையற்ற அச்சத்தால் முன்பதிவுகள்  நடைபெறுவதாக கள அறிக்கைகள் தெரிவிக்கின்றன.  உண்மையான விநியோக பற்றாக்குறையால் அல்லாமல், நுகர்வோர் பதட்டத்தால் இது இயக்கப்படுகிறது.

 

கள்ளச் சந்தைப்படுத்தலைத் தடுக்கவே வணிக எல்பிஜி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. வணிக எல்பிஜி, முற்றிலும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட, கடையில் கிடைக்கும் சந்தையில், எந்தவொரு அரசு மானியமும் இல்லாமல், சந்தை விலையில் விற்கப்படுகிறது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் பாரதி பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்களைக் கொண்ட மூன்று பேர் கொண்ட குழு மார்ச் 9, 2026 அன்று அமைக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள மாநில பொது விநியோகத் துறைகள் மற்றும் உணவக சங்கங்களுடன் விரிவான கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒரு முக்கிய முடிவவாக, சராசரி மாதாந்திர வணிக எல்பிஜி தேவையில் 20% இன்று முதல் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களால் ஒதுக்கப்படும். மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து, பதுக்கல் அல்லது கள்ளச் சந்தைப்படுத்தல் தடுக்கப்படும். சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் பொது விநியோக அமைப்பு முறையின் மூலம் மண்ணெண்ணெய் கிடைக்கிறது, தொழில்துறை மற்றும் வணிக நுகர்வோருக்கு எரிபொருள் எண்ணெய் கிடைக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2239021&reg=3&lang=1

(Release ID: 2239021)

****

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2239296) வருகையாளர் எண்ணிக்கை : 19
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam