பிரதமர் அலுவலகம்
எஸ்டோனியா குடியரசு அதிபரை பிரதமர் சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
18 FEB 2026 8:35PM by PIB Chennai
புதுதில்லியில் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டிற்கு இடையே 2026 பிப்ரவரி 18 அன்று எஸ்டோனிய குடியரசு அதிபர் திரு அலார் கரிஸைப் பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார். கடந்த ஆண்டு பாரிசில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு செயல் உச்சிமாநாட்டிற்கு இடையே தாங்கள் சந்தித்தது குறித்து பிரதமர் திரு மோடியும், அதிபர் கரிஸும் நினைவு கூர்ந்தனர்.
ஜனநாயகத்தின் பகிரப்பட்ட மாண்புகள், சட்டத்தின் ஆட்சி, சர்வதேச அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் பகிரப்பட்ட இலக்குகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியா – எஸ்டோனியா இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்களது உறுதிபாட்டை மீண்டும் உறுதி செய்தனர். பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரம் குறித்து இருதலைவர்களும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2229917®=3&lang=2
***
(Release ID: 2229917)
AD/IR/RJ/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2235049)
வருகையாளர் எண்ணிக்கை : 40
இந்த வெளியீட்டை படிக்க:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam