பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அந்நாட்டு பிரதமர் நேரில் வரவேற்பு அளித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 25 FEB 2026 7:42PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக இன்று இஸ்ரேல் சென்றடைந்தார். டெல் அவிவ் நகரத்தின் விமான நிலையத்தில் இஸ்ரேல் பிரதமர் மாண்புமிகு திரு பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது துணைவியார் திருமதி சாரா நெதன்யாகு ஆகியோர் பாரம்பரிய முறைப்படி பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பாரம்பரிய வரவேற்பைத் தொடர்ந்து, இரு நாடுகளின் பிரதமர்களும் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்கள். பிரதமர் தங்கி இருக்கும் ஹோட்டலில், இந்திய சமூகத்தினரும், இஸ்ரேலில் வசிக்கும் யூத இந்தியர்களும் அவருக்கு உற்சாக வரவேற்பை வழங்கினார்கள். இந்தியாவிற்கும், இஸ்ரேலுக்கும் இடையே உள்ள உறுதியான நட்புறவை எடுத்துரைக்கும் வகையில், பிரதமருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின் ஒரு பகுதியாக, இந்திய மற்றும் இஸ்ரேல் நாட்டுக் கலைஞர்களின் துடிப்பான கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

 

(Release ID: 2232824)

****

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2232844) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam