கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலகின் மிகவும் வெளிப்படையான வாகன சேவையாக பாரத் டாக்ஸி திகழும்; மத்திய அமைச்சர் திரு அமித்ஷா

இடுகை இடப்பட்ட நாள்: 23 FEB 2026 2:42PM by PIB Chennai

புதுதில்லியில் பாரத் டாக்ஸி உரிமையாளர்களுடன் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித்ஷா உரையாடினார்.

அப்போது பேசிய அவர், தொழிலாளர்களாக இருப்போர் லாபம் பெறுவோராக இருக்க வேண்டும் என்று கூறினார். டாக்ஸி உரிமையாளரை வளமை மிக்கவராகவும், ஓட்டுனரை நிஜ உரிமையாளராகவும் ஆக்குவதே இத்திட்டத்தின் நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார். ஓட்டுனர்கள் பாரத் டாக்ஸி உரிமையாளர்கள் என்றும் அவர்கள் லாபத்தில் பங்கு பெறுவார்கள் என்றும் கூறினார். வரும் 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் ஒவ்வொரு மாநகராட்சியிலும் பாரத் டாக்ஸி செயல்படும் என்று தெரிவித்தார்.

நாட்டின் 5 மிகப்பெரிய கூட்டுறவுகளை ஒருங்கிணைப்பதன் மூலம், பாரத் டாக்ஸி உருவாக்கப்பட்டுள்ளதாக திரு அமித் ஷா கூறினார்.  ஓட்டுநர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், கூட்டாளராக விரும்பும் எந்தவொரு ஓட்டுநரும் ரூபாய் 500 மதிப்புள்ள பங்குகளை வாங்குவதன் மூலம் உரிமையாளர் உரிமையை பெறுவார் என்று தெரிவித்தார்.

பாரத் டாக்ஸியின் இயக்குனர்கள் நிர்வாக கூட்டம் நடைபெறும்போது சில பொறுப்புகள் ஓட்டுநர்களுக்கு ஒதுக்கப்படும் என்று கூறினார். ஒருமுறை இயக்குநர்களின் நிர்வாகத்தில் ஓட்டுநர்கள் இடம்பெற்றுவிட்டால் அவர்கள் மற்ற ஓட்டுநர்களின் நலன் காப்பவர்களாகவும், பாதுகாவலர்களாகவும் இருப்பார்கள் என்று அவர் தெரிவித்தார்.

பாரத் டாக்ஸியின் நோக்கம் தனியார் நிறுவனம் போன்று பெரிய லாபம் ஈட்டுவதல்ல என்றும், நமது ஓட்டுநர் சகோதரர்களை வலிமைப்படுத்துவது என்றும் திரு அமித் ஷா கூறினார்.

தகவலின் ஒவ்வொரு அம்சத்தையும் ஓட்டுநர்களுக்கு அளிப்பதன் மூலம், உலகில் மிகவும் வெளிப்படையான வாகன சேவையாக பாரத் டாக்ஸி திகழும் என்று திரு அமித் ஷா கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2231721&reg=3&lang=1

AD/IR/LDN/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2231781) வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam