பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஷில்லாங் தொகுதி மக்களவை உறுப்பினர் டாக்டர் ரிக்கி ஏ.ஜே. சிங்கான் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 20 FEB 2026 9:31AM by PIB Chennai

ஷில்லாங் தொகுதி மக்களவை உறுப்பினர் டாக்டர் ரிக்கி ஏ.ஜே. சிங்கான் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"ஷில்லாங் தொகுதியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் டாக்டர் ரிக்கி ஏ.ஜே. சிங்கான் மறைவால் வருத்தமடைந்தேன். மேகாலயா மக்களுக்கு அவர் ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க சேவைக்காக அவர் நினைவுகூரப்படுவார். இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன."

***

(Release ID: 2230563)

AD/PLM/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2230697) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Gujarati , Telugu , Kannada , Malayalam