மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கும் தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்வு நாளை நடைபெறுகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
05 FEB 2026 4:42PM by PIB Chennai
தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடும் தனித்துவமான நிகழ்ச்சியான பரிக்ஷா பே சர்ச்சா என்ற தேர்வு குறித்த கலந்துரையாடல் என்ற நிகழ்வின் 9-வது பதிப்பு நாளை (பிப்ரவரி 6, 2026 - வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்குத் தொடங்கவுள்ளது. தேர்வுகள் குறித்த அழுத்தத்தைப் பற்றி விவாதித்து அதைப் போக்கவும், தேர்வுகளை ஒரு உற்சவமாக எதிர்கொள்ளவும் இது உதவுகிறது.
இந்த நிகழ்வு பிரதமர் திரு நரேந்திர மோடியின் யூடியூப் அலைவரிசை, தூர்தர்ஷன் தொலைக்காட்சி, கல்வி அமைச்சகத்தின் சமூக ஊடக தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இது தவிர, வேவ்ஸ் ஓடிடி அமேசான் பிரைம் வீடியோ, ஜியோ, ஜீ5, சோனி லைவ், ஸ்பாட்டிஃபை (ஆடியோ தளம்) போன்ற ஓடிடி தளங்கள் இந்த கலந்துரையாடல் நிகழ்வை நேரடியாக ஒளிபரப்பவுள்ளன.
புதிய தேசிய கல்விக் கொள்கையுடன் உடன் இணைந்து, இந்த நிகழ்வு, தன்னம்பிக்கை, நேர்மறை எண்ணங்கள் ஆகியவற்றை வளர்க்கிறது. மாணவர்களின் தேர்வு அனுபவத்தை சிறப்பாக மாற்றுவதையும், தேர்வுப் காலங்களை ஒரு விழா போல கொண்டாட வேண்டும் என்பதையும் இந்த நிகழ்வு நோக்கமாகக் கொண்டுள்ளது. பிரதமர் தமது "பரீட்சைக்கு பயமேன்" (Exam Warriors) என்ற புத்தகத்தில் தமது கருத்துக்களைச் சுருக்கமாகக் கூறியுள்ளார். இது பல மொழிகளிலும் பிரெய்லியிலும் கிடைக்கிறது. அதில் அவர் தன்னம்பிக்கையின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
பிரதமரால் வடிவமைக்கப்பட்ட பரிக்ஷா பே சர்ச்சா நிகழ்வு, துடிப்பானதாகவும் புதுமையானதாகவும், ஒவ்வொரு ஆண்டும் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. முதல் முறையாக, நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய வகையில் பல இடங்களில் இது தொடர்பான நிகழ்வுகள் நடத்தப்பட்டன. தில்லியைத் தவிர 4 வெவ்வேறு இடங்களில் இது நடைபெற்றது. தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், சத்தீஸ்கரின் ராய்ப்பூர், குஜராத்தின் தேவ் மோக்ரா, அசாமின் குவஹாத்தி என நாட்டின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்திய பகுதிகளை உள்ளடக்கிய வகையில் நடத்தப்பட்டது.
பரிக்ஷா பே சர்ச்சா 2026- க்கு முன்னதாக , நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்களை மையமாகக் கொண்ட நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. இதில் தற்சார்பு உணர்வை ஊக்குவிக்கும் ஓட்டம், வினாடி வினா, எழுத்துப் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த நடவடிக்கைகளில் சுமார் 4.81 கோடி மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வு நாடு தழுவிய மக்கள் இயக்கமாகப் பரிணமித்துள்ளது. நாடு முழுவதும் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்களின் அதிக பங்கேற்பை இது கண்டுள்ளது. இந்த ஆண்டு, பரிக்ஷா பே சர்ச்சாவின் 9-வது பதிப்பிற்கான பதிவுகள் முந்தைய அனைத்து நிகழ்வுகளையும் விஞ்சியுள்ளன. 4.50 கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மைகவ் தளம் (MyGov) மூலம் பதிவு செய்துள்ளனர். இந்த மிகப்பெரிய பங்கேற்பாகும். கல்வி அமைச்சகத்துடன் இணைந்து இந்த முயற்சியின் நோக்கங்களை முன்னேற்றுவதில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்புகளின் ஆதரவு முக்கியமானது. இது மாணவர்களின் வாழ்க்கையிலும் நல்ல மாற்றத்தைக் கொண்டு வரும்.
(Release ID: 2223847)
****
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2224128)
வருகையாளர் எண்ணிக்கை : 22
இந்த வெளியீட்டை படிக்க:
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Odia
,
English
,
हिन्दी
,
Khasi
,
Urdu
,
Marathi
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada