நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

திருத்தப்பட்ட வருமான வரித் தாக்கலுக்கான காலக்கெடு டிசம்பர் 31-ல் இருந்து மார்ச் 31 வரை நீட்டிக்கப்படுகிறது

प्रविष्टि तिथि: 01 FEB 2026 12:52PM by PIB Chennai

நாடாளுமன்றத்தில் இன்று 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், திருத்தப்பட்ட வருமான வரித் தாக்கலுக்கான காலக்கெடு டிசம்பர் 31-ல் இருந்து மார்ச் 31 வரை நீட்டிக்கப்படுகிறது என தெரிவித்தார். வரி செலுத்துவோரின் 'வாழ்க்கையை எளிதாக்க'  நேரடி வரிகளில் பல்வேறு முன்மொழிவுகளையும் அவர் அறிவித்தார்.

விபத்து இழப்பீடு: மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயத்தால் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகைக்கான வட்டிக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதற்கான TDS முறையும் நீக்கப்படுகிறது.

வெளிநாட்டுச் சுற்றுலா: வெளிநாட்டுச் சுற்றுலா தொகுப்புக்கான  டிசிஎஸ் விகிதம், தற்போதைய 5% மற்றும் 20%-லிருந்து 2%-ஆகக் குறைக்கப்படுகிறது.

கல்வி மற்றும் மருத்துவம்: வெளிநாட்டிற்குப் பணம் அனுப்பும் திட்டத்தின்  கீழ் கல்வி மற்றும் மருத்துவ நோக்கங்களுக்கான டிசிஎஸ் விகிதம் 5%-லிருந்து 2%-ஆகக் குறைக்கப்படுகிறது.

மனிதவளச் சேவைகள்: தெளிவின்மையைத் தவிர்க்க, மனிதவளச் சேவைக்கான டிடிஎஸ் 1% அல்லது 2% மட்டுமே வசூலிக்கப்படும்.

தானியங்கி சான்றிதழ்: சிறு வரி செலுத்துவோர், மதிப்பீட்டு அதிகாரியிடம் விண்ணப்பிக்கத் தேவையின்றி, விதிமுறை சார்ந்த தானியங்கி முறையில் 'குறைந்த அல்லது பூஜ்ஜிய வரி பிடித்தம்'  சான்றிதழைப் பெறலாம்.

படிவம் 15ஜி/15எச்: பல நிறுவனங்களில் பங்குகளை வைத்திருப்போர், டெபாசிட்டரிகளிலேயே இந்தப் படிவங்களைச் சமர்ப்பிக்கலாம்; அவர்கள் அதைத் அந்தந்த நிறுவனங்களுக்கு நேரடியாக வழங்குவார்கள்.

ஐடிஆர் 1 மற்றும் ஐடிஆர் 2 தாக்கல் செய்வோருக்கு ஜூலை 31 வரையும், தணிக்கை தேவையில்லாத வணிகங்களுக்கு ஆகஸ்ட் 31 வரையும் கால அவகாசம் வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221414&reg=3&lang=1

***

PKV/VK/SH


(रिलीज़ आईडी: 2221798) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Nepali , Marathi , Bengali , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam