நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வருமான வரிச் சட்டம் 2025, வரும் ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வருகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 01 FEB 2026 12:53PM by PIB Chennai

மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் 2026-27-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று (01.02.2026) தாக்கல் செய்தார். இதில் வரி நடைமுறையை எளிதாக்கும் வகையில், பல்வேறு நேரடி வரி சீர்திருத்தங்களை அவர் வெளியிட்டார்.

2025-ம் ஆண்டின் வருமான வரிச் சட்டம் இந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் முதல் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரவுள்ளதாக அவர் கூறினார். வரி செலுத்துவோருக்குப் போதிய அவகாசம்  வழங்கும் வகையில், எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரி விதிமுறைகளும், அது தொடர்பான படிவங்களும் விரைவில் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்தார். வருமான வரிப் படிவங்கள் சாதாரண மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், இணக்கமான வடிவத்தில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221416&reg=3&lang=1

***

VJ/PKV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2221749) வருகையாளர் எண்ணிக்கை : 112