நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கும், வேளாண் உற்பத்தித் திறன்களைமேம்படுத்துவதற்கும் பல்வேறு அறிவிப்புகள் மத்திய பட்ஜெட் 2026-27-ல் இடம்பெற்றுள்ளன

10 மில்லியன் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேங்காய் ஊக்குவிப்பு திட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 01 FEB 2026 12:50PM by PIB Chennai

மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று  தாக்கல் செய்த 2026-27-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் பரந்த நோக்கத்தின் கீழ் ஒதுக்கீடுகள் செய்யபட்டுள்ளன, 500 நீர்த்தேக்கங்கள் மற்றும் அமிர்த நீர் நிலைகளின் ஒருங்கிணைந்த மேம்பாடு, கடலோரப் பகுதிகளில் மீன்வள மதிப்புச் சங்கிலியை வலுப்படுத்துதல், மீன் விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புகளுடன் இணைந்து புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் பெண்கள் தலைமையிலான குழுக்களை உள்ளடக்கிய சந்தை இணைப்புகளை செயல்படுத்துதல் ஆகிய அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் அமைந்துள்ளன.

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான முக்கிய துறைகளில், கால்நடை பராமரிப்பும் ஒன்றாக இருக்கும் என்று திருமதி நிர்மலா சீதாராமன் கூறினார். தரமான வேலைவாய்ப்புகளை வழங்க, கடன்-இணைக்கப்பட்ட மானியத் திட்டம், கால்நடை சார்ந்த நிறுவனங்களின் நவீனமயமாக்கல், பால் மற்றும் கோழிப்பண்ணைகளில் கவனம் செலுத்தும் ஒருங்கிணைந்த மதிப்புச் சங்கிலிகளை உருவாக்குவதை மேம்படுத்துதல்  மற்றும் கால்நடை விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்குவதை ஊக்குவித்தல் உள்ளிட்ட தொழில்முனைவு மேம்பாட்டில் கால்நடை பராமரிப்புத் துறைக்கு மத்திய அரசு ஆதரவு வழங்கும்.

"உலகின் மிகப்பெரிய தேங்காய் உற்பத்தியாளராக இந்தியா திகழ்கிறது. கிட்டத்தட்ட 10 மில்லியன் விவசாயிகள் உட்பட சுமார் 30 மில்லியன் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக தென்னை விவசாயத்தை நம்பியுள்ளனர். தேங்காய் உற்பத்தியில் போட்டித்தன்மையை மேம்படுத்தவும், உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், தேங்காய் ஊக்குவிப்பு திட்டத்தை நான் முன்மொழிகிறேன்", என்று திருமதி சீதாராமன் கூறினார்.

 

நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டில் பாரத் விஸ்தார் (வேளாண் ஆதாரங்களை பயன்படுத்துவதற்கான மெய்நிகர் அமைப்பு) திட்டத்தை அறிவித்தார்.  

இது வேளாண் நடைமுறைகள் குறித்த அக்ரிஸ்டாக் தளங்கள் மற்றும் ஐசிஏஆர் தொகுப்பை தற்போதுள்ள செயற்கை நுண்ணறிவு அமைப்புகளுடன் ஒருங்கிணைக்கும் பன்மொழி செயற்கை நுண்ணறிவு கருவியாக செயல்படும். இது பண்ணை உற்பத்தித்திறனை அதிகரிப்பதுடன், விவசாயிகளுக்கு சிறந்த முடிவுகளை எடுக்க உதவவும் தனிப்பயனாக்கப்பட்ட ஆலோசனை ஆதரவை வழங்குவதன் மூலம் இடர்களைக்  குறைக்கவும் பயன்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221410&reg=3&lang=1

 

***

VJ/PKV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2221661) வருகையாளர் எண்ணிக்கை : 115