நிதி அமைச்சகம்
கிராமப்புறங்களில் உள்கட்டமைப்புப் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளது – பொருளாதார ஆய்வறிக்கை
प्रविष्टि तिथि:
29 JAN 2026 1:58PM by PIB Chennai
கிராமப்புறங்களில் சாலைகள், வீட்டுவசதி, குழாய் மூலம் குடிநீர் இணைப்பு, டிஜிட்டல் இணைப்பு உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வகையில் வேலைவாய்ப்புகள், சேவைகள், சந்தை வாய்ப்புகள் என பல்வேறு அம்சங்களில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
பிரதமரின் கிராமப்புறச் சாலைகள் திட்டத்தின் கீழ், அனைத்துப் பருவநிலைக்கும் ஏற்ற வகையில், சாலை வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமவெளிப் பகுதிகளில் 500-க்கும் அதிகமானோர் வசிக்கும் பகுதிகள் மற்றும் மலைப்பாங்கான இடங்களில் 250-க்கும் அதிகமாக மக்கள் வசிக்கும் பகுதிகள், வடகிழக்கு மாநிலங்களில் போக்குவரத்து வசதி இல்லாத கிராமப்புற பகுதிகளில் சாலை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
பிரதமரின் கிராமப்புறச் சாலைகள் திட்டத்தின் கீழ், 6,44,735 கிமீ தொலைவிலான சாலைகள், 7,453 பாலங்கள் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக பொருளாதார அறிக்கை தெரிவிக்கிறது. இத்திட்டத்தின் 3-ம் கட்ட பணிகளுக்கு கடந்த 2019 ஜூலை மாதத்தில் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம் 1,25,000 கிமீ நீளத்திற்கு சாலைகள் அமைப்பதுடன் முக்கிய கிராமங்களின் இணைப்புச் சாலைகளும் அமைக்கப்பட உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219944®=3&lang=1
**
TV/SV/KPG/EA
(रिलीज़ आईडी: 2220453)
आगंतुक पटल : 8