பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் என்சிசி பிஎம் பேரணியில் பிரதமர் உரையாற்றவுள்ளார்

प्रविष्टि तिथि: 27 JAN 2026 5:47PM by PIB Chennai

தில்லி கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் 2026 ஜனவரி 28 அன்று மாலை 3.30 மணி அளவில் நடைபெறவுள்ள என்சிசி பிஎம் ஆண்டு பேரணியில் உரையாற்ற உள்ளார்.

தேசம் முதன்மையானது – கடமைக்கு அர்ப்பணிப்புமிக்க இளையோர் என்ற கருப்பொருளில் இந்த ஆண்டு பேரணி நடைபெறவுள்ளது. இந்திய இளைஞர்களிடையே கடமை உணர்வு, ஒழுக்கம், தேசிய உறுதிப்பாடு ஆகியவற்றை இது பிரதிபலிக்கிறது.

ஒரு மாதகாலம் நடைபெற்ற தேசிய மாணவர் படை குடியரசுதின முகாம் 2026-ன் நிறைவைக் குறைக்கும் வகையில், இப்பேரணி நடைபெறுகிறது. இந்த முகாமில், நாடு முழுவதிலுமிருந்து 898 மாணவிகள் உட்பட 2,406 என்சிசி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219227&reg=3&lang=1  

***

TV/IR/KPG/SE


(रिलीज़ आईडी: 2219287) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Telugu , Malayalam , Malayalam