பிரதமர் அலுவலகம்
பெண் குழந்தைகளின் கண்ணியம், வாய்ப்புகள், அவர்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றுக்கான அரசின் உறுதிப்பாட்டை தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் பிரதமர் மீண்டும் எடுத்துரைத்துள்ளார்
प्रविष्टि तिथि:
24 JAN 2026 7:08PM by PIB Chennai
ஒவ்வொரு பெண் குழந்தையும் கண்ணியம், வாய்ப்புகள், நம்பிக்கை ஆகியவற்றுடன் வாழ்வதை உறுதி செய்வதற்கான அரசின் உறுதிப்பாட்டைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (24.01.2026) மீண்டும் எடுத்துரைத்துள்ளார்.
தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த பத்து ஆண்டுகளாக பெண் குழந்தைகளின் கல்வி, திறன் மேம்பாடு, சுகாதாரப் பராமரிப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த முயற்சிகள் பெண் குழந்தைகளின் வளர்ச்சிக்கான சிறந்த சூழலை உருவாக்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"பெண் குழந்தைகள், கண்ணியம், வாய்ப்புகள், நம்பிக்கை ஆகியவற்றுடன் வாழ்வதை உறுதி செய்வதற்கான எங்கள் அர்ப்பணிப்பை தேசிய பெண் குழந்தைகள் தினத்தன்று மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். கடந்த பத்து ஆண்டுகளில், பெண் குழந்தைகளின் சிறந்த கல்வி, திறன் மேம்பாடு, சுகாதாரப் பராமரிப்பு ஆகியவற்றில் நாங்கள் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். இது பெண் குழந்தைகள் சிறப்பாக வளர்ச்சி அடையக்கூடிய சூழலை உறுதிசெய்து, ஒரு வளர்ச்சியடைந்த பாரதத்தை நிறுவ திறம்படப் பங்களிக்கும்."
***
(Release ID: 2218238)
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2218319)
आगंतुक पटल : 10