உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இடுகை இடப்பட்ட நாள்: 24 JAN 2026 11:06AM by PIB Chennai

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா, 'தேசிய பெண் குழந்தைகள் தினத்தை' முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்துகள். பெண் குழந்தைகள் வெறும் நமது பொறுப்புகள் மட்டுமல்ல, அவர்கள் அளப்பரிய வலிமையின் சின்னம் என்பதை தேசிய பெண் குழந்தைகள் தினம் உணர்த்துகிறது. ராணி லட்சுமி பாய், ராணி வேலு நாச்சியார், முலா கபரு, ப்ரீத்திலதா வத்தேதார் ஆகியோரின் புகழ்பெற்ற உதாரணங்கள் ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் பெருமையையும் உத்வேகத்தையும் நிரப்புகின்றன. மோடி அரசின் 'பெண்கள் தலைமையிலான வளர்ச்சி' என்ற மந்திரம், பெண்கள் சக்தியை வளர்ச்சியின் முன்னணிக்குக் கொண்டு வந்துள்ளது. இன்று பெண்கள் நமது தேசத்தின் முன்னேற்றத்திற்குத் தலைமை தாங்குகிறார்கள், என்று கூறியுள்ளார்.

***

(Release ID: 2218015)

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2218155) வருகையாளர் எண்ணிக்கை : 48