பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குஜராத் மாநிலம் சூரத்தில் புல்லட் ரயில் திட்டக் குழுவினருடன் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட கலந்துரையாடலின் தமிழாக்கம் :

இடுகை இடப்பட்ட நாள்: 16 NOV 2025 3:27PM by PIB Chennai

புல்லட் ரயில் ஊழியர்: புல்லட் ரயில் என்பது எங்களின் அடையாளம். இந்த சாதனை உங்களையும் (மோடி அவர்கள்), எங்களையும் சாரும்.

பிரதமர்: நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? வேகம் சரியாக இருக்கிறதா? நீங்கள் நிர்ணயித்த கால அட்டவணைப்படி வேலை செய்கிறீர்களா அல்லது ஏதேனும் சிரமங்களைச் சந்திக்கிறீர்களா?

புல்லட் ரயில் ஊழியர்: இல்லை ஐயா, நாங்கள் எந்த சிரமத்தையும் சந்திக்கவில்லை.

பிரதமர்: நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

புல்லட் ரயில் ஊழியர்: நான் கேரளாவைச் சேர்ந்தவன். நான் பிரிவு-2-இல் உள்ள நவ்சாரி இரைச்சல் தடுப்பு  தொழிற்சாலையில் பணிபுரிகிறேன்.

பிரதமர்: நீங்கள் குஜராத்திற்கு வருவது இதுவே முதல் முறையா?

புல்லட் ரயில் ஊழியர்: ஆம் ஐயா. நான் இங்கு பிரிவு-2-ல் உள்ள இரைச்சல் தடுப்பு தொழிற்சாலையில் ரோபோடிக் பிரிவைக் கவனித்து வருகிறேன். இரைச்சல் தடுப்பிற்கான 'ரீபார் கேஜ்' (rebar cage) பகுதியை ரோபோக்களின் உதவியுடன் நாங்கள் வெல்டிங் செய்கிறோம்.

பிரதமர்: பாரதத்தின் முதல் புல்லட் ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்து, இந்த புல்லட் ரயிலை உருவாக்குவது பற்றி நீங்கள் என்ன உணருகிறீர்கள்? தனிப்பட்ட முறையில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது குறித்து உங்கள் குடும்பத்தினரிடம் என்ன சொல்வீர்கள்?

புல்லட் ரயில் ஊழியர்: ஐயா, இது ஒரு கனவு போல இருக்கிறது. நான் இப்போது செய்யும் பணி எதிர்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது எனக்கும் எனது குடும்பத்திற்கும் மிகவும் பெருமையான தருணம் ஐயா.

பிரதமர்: பாருங்கள், “நான் எனது நாட்டுக்காக உழைக்கிறேன், தேசத்திற்குப் புதிதாக எதையாவது வழங்குகிறேன்” என்று நீங்கள் உள்ளுக்குள் உணராத வரை, அந்த வேலைக்கு முழுமையான அர்த்தம் இருக்காது. முதல் விண்வெளி செயற்கைக்கோளை ஏவியவர் அப்படித்தான் உணர்ந்திருப்பார், இன்று நூற்றுக்கணக்கான செயற்கைக்கோள்கள் ஏவப்படுகின்றன.

புல்லட் ரயில் ஊழியர்: நமஸ்தே ஐயா, என் பெயர் ஸ்ருதி. நான் பெங்களூரைச் சேர்ந்தவள், தலைமை பொறியியல் மேலாளராக (Lead Engineering Manager) உள்ளேன். வடிவமைப்பு மற்றும் பொறியியல் கட்டுப்பாடுகளை நான் கவனித்து வருகிறேன். நீங்கள் சொன்னது போல், ஆரம்பக்கட்ட திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல் எதுவாக இருந்தாலும், அது முந்தைய நிலைகளிலேயே தொடங்குகிறது. பின்னர் நாம் செயல்பாட்டை நோக்கி நகரும்போது, ஒவ்வொரு அடியிலும் அதன் சாதக பாதகங்களைச் சரிபார்க்கிறோம். ஏதாவது வேலை செய்யவில்லை என்றால், அது ஏன் வேலை செய்யவில்லை என்று கேட்கிறோம். முதலில் ஒரு தீர்வைக் காண முயல்கிறோம். அப்போதும் முடியாவிட்டால், மாற்றுத் தீர்வுகளைத் தேடுகிறோம். அப்படித்தான் நாங்கள் படிப்படியாக முன்னேறுகிறோம் ஐயா.

பிரதமர்: உங்கள் அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டு, ஒரு வகையான ‘வழிகாட்டி புத்தகம்’ (Blue book) தயாரிக்கப்பட்டால், நாம் இன்னும் பல புல்லட் ரயில்களை உருவாக்க முற்படும்போது அது நாட்டிற்குப் பெரிதும் உதவும். ஒவ்வொரு முறையும் அனைவரும் புதிதாகத் தொடங்க வேண்டும் என்று நாம் விரும்பவில்லை. இங்கிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்ற இடங்களிலும் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் ஒரு குறிப்பிட்ட முறை ஏன் பயன்படுத்தப்படுகிறது என்ற அறிவு இருந்தால் மட்டுமே அதைத் துல்லியமாக மற்ற இடங்களிலும் செய்ய முடியும். இல்லையெனில் மக்கள் புரிந்து கொள்ளாமல் அப்படியே நகலெடுப்பார்கள். நீங்கள் அத்தகைய பதிவைப் பராமரித்தால், அது எதிர்கால மாணவர்களுக்குக் கூட உதவும். உங்கள் வாழ்க்கையை இங்கே அர்ப்பணித்து, தேசத்திற்கு மதிப்புமிக்க ஒன்றைத் தந்து செல்வீர்கள்.

புல்லட் ரயில் ஊழியர்: எங்களுக்குப் புகழும் வேண்டாம், வெகுமதியும் வேண்டாம். நாடு முன்னேற வேண்டும் என்பது மட்டுமே எங்களது விருப்பம்.

பிரதமர்: ஆஹா! (வா!)

புல்லட் ரயில் ஊழியர்: மோடி ஜி, உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாகட்டும். நாட்டின் பெயர் எப்போதும் மீண்டும் மீண்டும் உயர்ந்து கொண்டே இருக்கட்டும். புல்லட் ரயில் எங்களின் அடையாளம்; புல்லட் ரயில் எங்களின் அடையாளம். இந்தச் சாதனை உங்களுடையது மற்றும் எங்களுடையது மோடி ஜி.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2190512&reg=3&lang=2

வெளியிட்டு எண்: 2190512

****

AD/VK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2213954) வருகையாளர் எண்ணிக்கை : 17