பிரதமர் அலுவலகம்
2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதற்கு நாட்டின் ஜென் ஜி (Gen Z) தலைமுறையினர் எவ்வாறு தங்களது திறன்களை பயன்படுத்துகின்றனர் என்பது குறித்த கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
12 JAN 2026 4:27PM by PIB Chennai
2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதற்கு நாட்டின் ஜென் ஜி (Gen Z) தலைமுறையினர் எவ்வாறு தங்களது திறன்களை பயன்படுத்துகின்றனர் என்பது குறித்து மத்திய அமைச்சர் திரு கிஷண் ரெட்டி எழுதியுள்ள கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.
தூய்மை பாரதம், இல்லந்தோறும் மூவண்ணக்கொடி, எனது மண் எனது நாடு, காசநோயில்லாத இந்தியா போன்ற பெரும் இயக்கங்களை இந்திய இளைஞர்கள் தலைமை வகித்து வடிவமைத்தனர் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளதாக திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மத்திய அமைச்சர் திரு ஜி கிஷண் ரெட்டியின் பதிவிற்கு திரு மோடி பதிலளித்திருப்பதாவது:
“2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய இந்தியா ஒருங்கிணைந்து செயல்படும் நிலையில், ஜென் ஜி (Gen Z) தலைமுறையினர் நாட்டின் நலன் கருதி ஒரு படையாக தங்களது திறன்களை பயன்படுத்துகின்றனர் என்பது குறித்து மத்திய அமைச்சர் திரு கிஷண் ரெட்டி எழுதியுள்ளார்.
தூய்மை பாரதம், இல்லந்தோறும் மூவண்ணக்கொடி, எனது மண் எனது நாடு, காசநோயில்லாத இந்தியா போன்ற பெரும் இயக்கங்களை இந்திய இளைஞர்கள் தலைமை வகித்து வடிவமைத்தனர் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.”
Release ID:2213786
****
TV/IR/LDN/SH
(रिलीज़ आईडी: 2213906)
आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
Marathi
,
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Kannada