உள்துறை அமைச்சகம்
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, ராஜமாதா ஜிஜாபாயின் பிறந்த தினத்தில் அவருக்கு மரியாதை செலுத்தினார்
प्रविष्टि तिथि:
12 JAN 2026 11:16AM by PIB Chennai
ராஜமாதா ஜிஜாபாய், சத்ரபதி சிவாஜி மகாராஜிடம் ஹிந்தவி சுயராஜ்யத்தை நிறுவும் உறுதியை விதைத்து, தேசத்தைப் பாதுகாக்கும் உன்னத இலக்கை நோக்கி அவரை ஊக்கப்படுத்தினார்.
சிறுவயதிலிருந்தே, ராஜமாதா ஜிஜாபாய், சத்ரபதி சிவாஜி மகாராஜிடம் தைரியம், சுயமரியாதை மற்றும் சொந்த கலாச்சாரத்தைப் பாதுகாத்தல் போன்ற விழுமியங்களை ஊட்டினார்.
மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு. அமித் ஷா, இன்று ராஜமாதா ஜிஜாபாயின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தினார். சத்ரபதி சிவாஜி மகாராஜிடம் ஹிந்தவி சுயராஜ்யத்தை அமைப்பதற்கான மனஉறுதியை ஏற்படுத்தி, நாட்டைப் பாதுகாக்கும் உன்னதமான இலக்கை நோக்கி பயணிக்க ராஜமாதா ஜிஜாபாய் அவருக்கு உத்வேகம் அளித்தார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், திரு அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில், கூறியிருப்பதாவது;
“ராஜமாதா ஜிஜாபாய், சத்ரபதி சிவாஜி மகாராஜிற்கு சிறுவயதிலிருந்தே, துணிச்சல், சுயமரியாதை, நாட்டின் கலாச்சாரத்தைப் பாதுகாத்தல் போன்ற விழுமியங்களை ஊட்டி வளர்த்தார். அவர் சிவாஜி மகாராஜிடம் ஹிந்தவி சுயராஜ்யத்தை நிறுவுவதற்கான மனஉறுதியை ஏற்படுத்தி, நாட்டைப் பாதுகாக்கும் உன்னதமான இலக்கை நோக்கி பயணிக்க அவருக்கு உத்வேகம் அளித்தார். ராஜமாதா ஜிஜாபாயின் பிறந்த தினத்தில், அவருக்கு எனது மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2213580®=3&lang=1
***
(Release ID: 2213580)
TV/SV/PD
(रिलीज़ आईडी: 2213686)
आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Kannada
,
Malayalam