உள்துறை அமைச்சகம்
'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டு விழா குறித்து மாநிலங்களவையில் சிறப்பு விவாதத்தைத் தொடங்கி வைத்தார், மத்திய அமைச்சர் திரு அமித் ஷா
प्रविष्टि तिथि:
09 DEC 2025 6:54PM by PIB Chennai
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா, தேசியப் பாடலான 'வந்தே மாதரத்தின்' 150-வது ஆண்டை முன்னிட்டு, மாநிலங்களவையில் சிறப்பு விவாதத்தைத் தொடங்கி வைத்தார்.
வந்தே மாதரம் என்பது இந்தியத் தாய் மீதான அர்ப்பணிப்பு, பக்தி மற்றும் கடமை உணர்வுகளை எழுப்பும் ஒரு அழியாத படைப்பு என்றும் மேற்கு வங்கத்தில் எதிர்வரும் தேர்தல்களுடன் இணைத்து அதன் மகிமையை சிலர் குறைத்து மதிப்பிட முயற்சிக்கிறார்கள் என்றும் அவர் கூறினார். மேற்கு வங்கம், இந்தியா மட்டுமின்றி, உலகில் எங்கெல்லாம் சுதந்திரத்தை விரும்புபவர்கள் இருந்தார்களோ, அவர்கள் தங்கள் ரகசியக் கூட்டங்களில் கூட வந்தே மாதரம் பாடுவார்கள் என்றும் திரு ஷா கூறினார். இன்றும் கூட, எல்லையில் ஒரு வீரர் உயர்ந்த தியாகத்தைச் செய்யும்போது, அவரது உதடுகளில் ஒலிக்கும் மந்திரம் வந்தே மாதரமாகத்தான் உள்ளது என்று உள்துறை அமைச்சர் கூறினார்.
நமது பண்டைய நாகரிகம், கலாச்சார தேசியவாதத்தையும் தாய்நாட்டை தெய்வீகத் தாயாக வணங்கும் நமது நிலையான பாரம்பரியத்தையும், பங்கிம் சந்திர சட்டோபாத்யாய் மிகுந்த நுட்பத்துடன் மீட்டெடுத்து மீண்டும் உறுதிப்படுத்தினார் என்று திரு ஷா கூறினார். அப்போதைய அரசு அதை அடக்க முயன்றது, அதைப் பாடுவதற்கு தடைகளை விதித்தது, வந்தே மாதரம் பாடியவர்கள் கசையடிகளால் அடித்து சிறையில் அடைக்கப்பட்டனர். இருப்பினும், இந்தத் தடைகள் அனைத்தையும் கடந்து, எந்த ஒழுங்கமைக்கப்பட்ட விளம்பரமும் இல்லாமல், அந்தப் பாடல் ஒவ்வொரு இதயத்தையும் நெகிழச் செய்து, காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை பரவியது. இந்தியாவின் கலாச்சாரத்தை மதிக்கும் அனைவருக்கும் வந்தே மாதரம் மறுமலர்ச்சியின் மந்திரமாக மாறியுள்ளது என்றும் அவர் கூறினார்.
நாடு சுதந்திரம் பெறுவதற்கு உந்து சக்தியாக வந்தே மாதரம் மாறியது. அதேபோல, இந்த அமிர்தக் காலத்தில், இந்தியாவை வளர்ச்சியடைந்ததாகவும், சிறப்பானதாகவும் மாற்றுவதற்கான முழக்கமாக வந்தே மாதரம் மாறும்.
ஒவ்வொரு குழந்தையின் இதயத்திலும் வந்தே மாதரத்தின் உணர்வை மீண்டும் எழுப்புவது, ஒவ்வொரு இளைஞரின் மனதிலும் வந்தே மாதரத்தின் கோஷத்தை உறுதியாகப் பதிய வைப்பது, தேசிய பாடலின் உண்மையான அர்த்தத்தால் ஒளிரும் பாதையில் அவர்களின் வாழ்க்கையை அர்ப்பணிக்க ஊக்குவிப்பது முதலியவை இந்த அவையின் ஒவ்வொரு உறுப்பினரின் பகிரப்பட்ட பொறுப்பு என்று மத்திய உள்துறை அமைச்சர் வலியுறுத்தினார். நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் கனவு கண்ட இந்தியாவை உருவாக்குவதற்கு வந்தே மாதரத்தின் தெளிவான அழைப்பு உந்து சக்தியாக மாற வேண்டும் என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2201051®=3&lang=1
***
SS/BR/PD
(रिलीज़ आईडी: 2212456)
आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Khasi
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam