பிரதமர் அலுவலகம்
2025 நவம்பர் 20 அன்று கோயம்புத்தூரில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை விவசாய உச்சிமாநாட்டில், விவசாயிகளுடன் பிரதமர் நடத்திய உரையாடலின் தமிழாக்கம்
प्रविष्टि तिथि:
20 NOV 2025 12:59PM by PIB Chennai
விவசாயி: வணக்கம்!
பிரதமர்: வணக்கம்! இவர்கள் அனைவரும் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார்களா?
விவசாயி: ஆம், ஐயா.
விவசாயி: இது சூரிய ஒளியில் உலர்த்தப்பட்ட வாழைப்பழம் (Solar-dried banana).
பிரதமர்: வாழைப்பழங்களை அறுவடை செய்த பிறகு...
விவசாயி: ஆம், ஐயா.
பிரதமர்: மீதமுள்ள கழிவுகளை நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
விவசாயி: இவையெல்லாம் வாழைப்பழத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், இது கழிவு... ஐயா, இது வாழைப்பழக் கழிவிலிருந்து உருவாக்கப்பட்டது; இது வாழைப்பழத்தின் மதிப்பு கூட்டல் மூலம் கிடைத்தது, ஐயா.
பிரதமர்: உங்களுடைய தயாரிப்புகள் நாடு முழுவதும் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்படுகிறதா?
விவசாயி: ஆம், ஐயா.
விவசாயி: உண்மையில், நாங்கள் இங்கே ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம், ஐயா. அனைத்து உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளும், தனிப்பட்ட விவசாயிகளும் கூட இதன் ஒரு அங்கமாக இருக்கிறார்கள், ஐயா.
பிரதமர்: சரி.
விவசாயி: நாங்கள் அனைத்தையும் செய்கிறோம்: ஆன்லைன் விற்பனை, ஏற்றுமதி, மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகள் உட்பட இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு சந்தையிலும் நாங்கள் விற்பனை செய்கிறோம், ஐயா.
பிரதமர்: ஒரு உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளில் எத்தனை பேர் இணைந்து பணியாற்றுகிறார்கள்?
விவசாயி: ஆயிரம் பேர்.
பிரதமர்: ஆயிரம் பேரா?
விவசாயி: ஆம், ஐயா.
பிரதமர்: ஓ! ஒரு முழுப் பகுதியிலும், நீங்கள் வாழைப்பழங்களை மட்டுமே பயிரிடுகிறீர்களா, அல்லது வெவ்வேறு பயிர்களைக் கலந்து பயிரிடுகிறீர்களா?
விவசாயி: வெவ்வேறு பகுதிகளில், வெவ்வேறு பிரத்யேகப் பயிர்கள் உள்ளன, ஐயா. தற்போது, எங்களிடம் புவிசார் குறியீடு பெற்ற தயாரிப்புகளும் உள்ளன.
பிரதமர்: சரி, அதுவும் உங்களிடம் இருக்கிறதா.
விவசாயி: நான்கு வகையான தேயிலைகள் உள்ளன. கருப்புத் தேநீர் (Black tea) பற்றி அனைவருக்கும் தெரியும். இது அதிலிருந்து... (தெளிவாக இல்லை). இதை நாங்கள் வெள்ளை தேநீர் (White tea) என்று அழைக்கிறோம். இது ஊலாங் (Oolong). இது 40% நொதிக்க வைக்கப்பட்ட தேநீர், ஊலாங் தேநீர் மற்றும் பச்சை தேநீர் (Green tea).
பிரதமர்: இந்த நாட்களில், வெள்ளை தேநீருக்குப் பெரிய சந்தை உள்ளது.
விவசாயி: ஆம், ஆம் ஐயா.
விவசாயி: கத்தரிக்காய் — அனைத்தும் இயற்கை விவசாயத்தில் விளைந்தவை.
பிரதமர்: இந்த பருவத்தில், மாம்பழங்கள் கிடைக்கின்றனவா...?
விவசாயி: ஆம், மாம்பழங்கள், ஆம் ஐயா...
விவசாயி: பருவம் அல்லாத காலத்து மாம்பழங்கள் ...
பிரதமர்: இந்நாட்களில், இதற்குப் பெரிய சந்தை இருக்கிறதா?
விவசாயி: முருங்கை.
பிரதமர்: முருங்கை!
விவசாயி: ஆம், ஐயா.
பிரதமர்: முருங்கை இலைகளை வைத்து நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
விவசாயி: நாங்கள் முருங்கை இலை பொடி தயாரித்து அதனை ஏற்றுமதி செய்கிறோம், ஐயா.
பிரதமர்: அந்தப் பொடி மிகவும்...
விவசாயி: தேவையில் உள்ளது.
பிரதமர்: இதற்கு மிக அதிக தேவை உள்ளதா.
விவசாயி: ஆம், ஐயா.
பிரதமர்: முக்கியமாக எந்த நாடுகள் இதனை வாங்குகின்றன?
விவசாயி: அமெரிக்கா, ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் ஜப்பான் ஆகியவை முக்கிய சந்தைகளாக உள்ளன. தென்கிழக்கு ஆசியாவிலிருந்தும் எங்களுக்கு நல்ல தேவை உள்ளது...
விவசாயி: உண்மையில், இவை அனைத்தும் புவிசார் குறியீடு பெற்ற தயாரிப்புகள். தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 புவிசார் குறியீடு தயாரிப்புகளை நாங்கள் இங்கே காட்சிப்படுத்தியுள்ளோம். கும்பகோணம் வெற்றிலை, மதுரை மல்லிகை, மேலும் இதுவும் மதுரையைச் சேர்ந்ததுதான் ஐயா. இதுபோல, இங்கே இருக்கும் அனைத்துப் பொருட்களும்...
பிரதமர்: இதற்கான சந்தை எங்கே இருக்கிறது?
விவசாயி: இந்தியா முழுவதும் உள்ளது ஐயா. மேலும் தமிழ்நாட்டில், அவர்கள் ஒவ்வொரு சுப நிகழ்ச்சிகளிலும் இதனைப் பயன்படுத்துகிறார்கள்...
பிரதமர்: எனது காசியில் உள்ள மக்கள் இதனை எடுத்துக் கொள்கிறார்களா இல்லையா? அவர்கள் உங்களுக்கு 'பனாரசி பான்' வழங்குகிறார்களா?
விவசாயி: ஆம், ஐயா.
விவசாயி: இது பழனி முருகன்...
விவசாயி: குறைந்தது... 100-க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் உள்ளன ஐயா. எங்களது தரப்பிலிருந்து, தேன் முதல் தொடங்கி...
பிரதமர்: இதற்கான சந்தை எப்படி உள்ளது?
விவசாயி: மிகப்பரியது ஐயா. தேவை மிகவும் அதிகமாக உள்ளது. தேனுக்கு, எங்களிடம் உலகளாவிய சந்தை உள்ளது.
விவசாயி: எங்களிடம் பாரம்பரிய நெல் ரகங்களில் மட்டுமே கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன... ஐயா, இவை சத்து மதிப்பில் சிறுதானியங்களுக்கு இணையானவை...
பிரதமர்: நெல் விவசாயத்தில், தமிழ்நாடு எதைச் சாதித்துள்ளதோ...
விவசாயி: ஆம், ஐயா.
பிரதமர்: அதனை உலகத்தால் இன்னும் ஈடுகட்ட முடியவில்லை.
விவசாயி: அது உண்மைதான், ஐயா.
பிரதமர்: ஆம்.
விவசாயி: ஐயா, இதில் நாங்கள் நெல், அரிசி மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் அனைத்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களையும் ஏற்றுமதி செய்கிறோம். அவை அனைத்தும் இப்போது இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பிரதமர்: இளம் தலைமுறை விவசாயிகள் பயிற்சிக்கு வருகிறார்களா?
விவசாயி: ஆம், ஐயா. இப்போது அவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.
பிரதமர்: அவர்கள் கேள்விகள் கேட்க வேண்டுமே. முதலில் அவர்களுக்குப் புரியாமல் இருக்கலாம். பிஹெச்டி (PhD) முடித்த ஒருவர் இந்த வேலையைச் செய்கிறார்! அதன் பலன்களை அவர்கள் பார்க்கும்போது, நீங்கள் அவர்களுக்கு என்ன விளக்குகிறீர்கள்?
விவசாயி: ஆரம்பத்தில், மக்கள் அவர்களை ஏதோ பைத்தியம் பிடித்தவர்களைப் போலப் பார்த்தார்கள். ஆனால் இப்போது அவர்கள் மாதம் 2 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார்கள். ஐயா, அவர்கள் ஒரு மாவட்ட ஆட்சியரை (Collector) விட அதிகமாகச் சம்பாதிக்கிறார்கள். அதனால்தான் மக்கள் இப்போது அவர்களை ஒரு உத்வேகமாகக் கருதுகிறார்கள்.
பிரதமர்: அப்படியானால் இனி ஆட்சியர்கள் அனைவரும் (விவசாயத்திற்கு) வந்துவிடுவார்கள்.
விவசாயி: எங்களது பண்ணையில் 7,000 விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்துள்ளோம். இது இயற்கை விவசாயத் திட்டத்தின் (TNAU) கீழ் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மாதிரி பண்ணை. மேலும் 3,000 கல்லூரி மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர்: உங்கள் தயாரிப்புகளுக்குச் சந்தை கிடைக்கிறதா?
விவசாயி: நாங்கள் நேரடியாகச் சந்தைப்படுத்துகிறோம் மற்றும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். பின்னர் தயாரிப்புகளை மதிப்பு கூட்டல் செய்கிறோம் — எண்ணெய், கூந்தல் எண்ணெய், கொப்பரை, சோப்பு.
பிரதமர்: உங்கள் கூந்தல் எண்ணெயை யார் வாங்குவார்கள்?
பிரதமர்: நான் குஜராத்தில் இருந்தபோது, 'கால்நடை விடுதி' என்ற கருத்தாக்கத்தை உருவாக்கினேன்.
விவசாயி: ஆம்.
பிரதமர்: கிராமத்திலுள்ள அனைத்து கால்நடைகளையும் கால்நடை விடுதியில் வைக்க வேண்டும்.
விவசாயி: ஆம்.
பிரதமர்: அப்போது கிராமம் சுத்தமாக இருக்கும், மேலும் நிர்வாகத்திற்கு ஒரு மருத்துவர் மற்றும் நான்கு-ஐந்து பேர் மட்டுமே உங்களுக்குத் தேவைப்படும். இது மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்படுகிறது.
விவசாயி: இவை அனைத்தையும்... நாங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்து அருகில் உள்ள விவசாயிகளுக்கு வழங்குகிறோம்...
பிரதமர்: நீங்கள் அதை விவசாயிகளுக்கு வழங்குகிறீர்கள்.
***
(Release ID: 2192008)
AD/SV/KPG/PD
(रिलीज़ आईडी: 2212109)
आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
हिन्दी
,
English
,
Urdu
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam