நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புகையிலை, குட்கா, ஜர்தா போன்றவற்றின் புதிய உற்பத்தி வரி தொடர்பாக நிதியமைச்சகத்தின் விளக்கம்

प्रविष्टि तिथि: 01 JAN 2026 11:32AM by PIB Chennai

புகையிலை, குட்கா, ஜர்தா போன்றவற்றின் புதிய வரி விகிதங்கள், விதிமுறைகள் தொடர்பான அறிக்கையை மத்திய கலால் வரித்துறை 31.12.2025 வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய வரி விகிதங்கள் பிப்ரவரி மாதம் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. பாக்கெட்டுகளில்  அடைத்து விற்கப்படும் மணமூட்டப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கான விதிமுறைகளும் இதில் அடங்கும்.

இதற்கென மத்திய கலால் வரித்துறையில் வரி செலுத்துவோர் தனியாக பதிவு செய்ய வேண்டியதில்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கான விதிமுறைகள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் பொருட்களின் தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே இந்த விதிமுறைகள் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டின்களில் அடைத்து வைப்பது உட்பட பிற வடிவங்களில் தயாரிக்கப்படும் புகையிலைப் பொருட்களுக்கான வரி விகிதங்கள் அவற்றில் மதிப்பீடுகளைப் பொருத்து அமையும் என்றும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் புதிய வரிவிகிதங்கள் பொருந்தக் கூடிய புகையிலைப் பொருட்கள் குறித்தும் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்தும் அடிக்கடி எழுப்பப்படும் வினாக்களுக்கான விரிவான பதில்களை நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2210382&reg=3&lang=1   

--

AD/SV/KPG/KR


(रिलीज़ आईडी: 2210462) आगंतुक पटल : 31
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Bengali-TR , Manipuri , Punjabi , Gujarati , Odia , Kannada , Malayalam