பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நிதி ஆயோக்கில் பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

प्रविष्टि तिथि: 30 DEC 2025 6:33PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடிநிதி ஆயோக்கில் இன்று நடைபெற்ற தலைசிறந்த பொருளாதார நிபுணர்கள் மற்றும் வல்லுநர்களுடனான கலந்துரையாடலில் பங்கேற்றார்.

வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான செயல்திட்டம்’ என்ற கருப்பொருளில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், 2047-ஆம் ஆண்டை நோக்கிய இந்தியாவின் பயணத்திற்கான அடிப்படைத் தூண்களை எடுத்துரைத்தார். 2047-ஆம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவது என்பது ஒரு தேசிய லட்சியம் என்று குறிப்பிட்ட அவர்இந்தத் தொலைநோக்குப் பார்வையானது தற்போது அரசாங்கத்தின் கொள்கை என்ற நிலையைக் கடந்துமக்களின் உண்மையான ஒரு மக்கள் லட்சியமாக மாறியுள்ளது என்று தெரிவித்தார்.

கல்விநுகர்வு முறைகள் மற்றும் உலகளாவிய இடமாற்றம் ஆகியவற்றில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் மூலம் இந்த மாற்றம் தெளிவாகத் தெரிகிறது என்றும்இதற்கேற்ப வளர்ந்து வரும் சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மேம்படுத்தப்பட்ட நிறுவனத் திறன் மற்றும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட உள்கட்டமைப்புகள் அவசியம் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார். உலகளாவியத் திறனை வளர்ப்பதற்கும்சர்வதேச ஒருங்கிணைப்பைப் பெறுவதற்கும் துரிதகதி சீர்திருத்தங்கள் தேவை என்று அவர் வலியுறுத்தினார்.

 நீண்டகால வளர்ச்சியைத் தக்கவைக்க பல்வேறு துறைகளில் இத்தகைய சீர்திருத்தங்களை மேற்கொள்ள அவர் அழைப்பு விடுத்தார். இந்தியாவின் கொள்கை உருவாக்கமும் வரவு-செலவுத் திட்டமும் 2047-ஆம் ஆண்டுக்கான தொலைநோக்குப் பார்வையுடனே எப்போதும் இணைந்திருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும்உலகளாவிய மனிதவளம் மற்றும் சர்வதேச சந்தைகளுக்கான ஒரு முக்கிய மையமாக இந்தியா தொடர்ந்து திகழ்வதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.

இந்தக் கலந்துரையாடலின் போதுஉற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் உற்பத்தித் திறன் மற்றும் போட்டித்தன்மையை அதிகரிப்பதற்கான உத்திகள் குறித்தத் தங்களது கருத்துகளைப் பொருளாதார நிபுணர்கள் பகிர்ந்து கொண்டனர். குடும்பச் சேமிப்பை அதிகரித்தல்வலுவான உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நவீனத் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் கட்டமைப்பில் மாற்றங்களை விரைவுபடுத்துவது குறித்து இந்த விவாதங்கள் கவனம் செலுத்தின. பல்வேறு துறைகளின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதில் செயற்கை நுண்ணறிவின்  பங்கு குறித்தும்இந்தியாவின் டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பை தொடர்ந்து விரிவாக்கம் செய்வது குறித்தும் இந்த வல்லுநர் குழு விரிவாக ஆராய்ந்தது.

2025-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட முன் எப்போதும் இல்லாத வகையிலான பல்வேறு துறை சார்ந்த சீர்திருத்தங்கள் மற்றும் வரும் ஆண்டில் அவற்றைத் தொடர்ந்து வலுப்படுத்துவது ஆகியவைஇந்தியாவின் பொருளாதார அடித்தளத்தை மேலும் உறுதியாக்கும் என்று பங்கேற்பாளர்கள் குறிப்பிட்டனர். இதன் மூலம் இந்தியா புதிய வாய்ப்புகளைத் திறந்துவிட்டுஉலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாகத் தனது பயணத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதை இது உறுதி செய்யும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்தக் கலந்துரையாடலில் திரு.சங்கர் ஆச்சார்யாதிரு.  அசோக் கே பட்டாச்சார்யாதிரு.  என் ஆர் பானுமூர்த்திசெல்வி அமிதா பத்ராதிரு.  ஜன்மேஜய சின்ஹாதிரு.அமித் சந்திராசெல்வி ரஜனி சின்ஹாதிரு.  தினேஷ் கனபர்திரு. வசந்த பிரதான்திரு.  மதன் சப்னாவிஸ்செல்வி ஆஷிமா கோயல்திரு.  தர்மகீர்த்தி ஜோஷிதிரு.  உமாகாந்த் தாஷ்,திரு. பினாகி சக்கரவர்த்தி,திரு. இந்திரனில் சென் குப்தாதிரு.சமீரன் சக்கரவர்த்திதிரு. அபிமான் தாஸ்திரு.ராகுல் பஜோரியாசெல்வி மோனிகா ஹாலன் மற்றும் திரு. சித்தார்த்த சன்யால் உள்ளிட்ட பல புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்கள் மற்றும் வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2209891&reg=3&lang=1

***

TV/VK/SE


(रिलीज़ आईडी: 2209945) आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Odia , Malayalam