பிரதமர் அலுவலகம்
மக்களின் அன்றாட உரிமைகளை நான்கு முக்கியத் தூண்கள் மூலம் இந்தியா பாதுகாக்கிறது: மனித உரிமைகள் தொடர்பான தேசிய மாநாட்டில் பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே. மிஸ்ரா உரை
प्रविष्टि तिथि:
10 DEC 2025 3:32PM by PIB Chennai
பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே. மிஸ்ரா, இன்று (10.12.2025) புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற "அன்றாட அத்தியாவசியங்களை உறுதி செய்தல் - அனைவருக்கும் பொது சேவைகளும் கண்ணியமும்" என்ற தேசிய மாநாட்டின் தொடக்க அமர்வில் உரையாற்றினார். மனித உரிமைகள் தினத்தை ஒட்டி இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
தமது உரையில், சர்வதேச மனித உரிமைகள் தினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். உணவு, உடை, வீட்டுவசதி, மருத்துவ பராமரிப்பு, சமூக சேவைகள் போன்றவை தொடர்பான உரிமையை உறுதி செய்யும் மனித உரிமைகள் பற்றிய 1948-ம் ஆண்டின் உலகளாவிய பிரகடனத்தின் பிரிவு 25(1)-ஐ அவர் நினைவு கூர்ந்தார். மனித உரிமைகள் தினம், அன்றாட வாழ்க்கையில் கண்ணியத்தைப் பற்றி சிந்திப்பதற்கான ஒரு நாள் என்று அவர் குறிப்பிட்டார். இந்த ஆண்டின் கருப்பொருள், "மனித உரிமைகள், நமது அன்றாட அத்தியாவசியங்கள்", என்பது அரசுடன் மக்களின் தொடர்புகளையும், அதில் அரசு அமைப்புகளின் பங்கையும் எடுத்துக்காட்டுகிறது என அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் நாகரிக நெறிமுறைகள், கண்ணியத்தையும் கடமையையும் மையமாக கொண்டுள்ளன என்று அவர் கூறினார். நாட்டில் 2014-ம் ஆண்டுக்கு பிறகு, உரிமைகள் மேலும் வலுவடைந்துள்ளதாகவும், மக்களின் கண்ணியம் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அன்றாட அத்தியாவசியத் தேவைகளைப் பாதுகாக்கும் நான்கு தூண்களை அவர் சுட்டிக் காட்டினார். கண்ணியம், சமூகப் பாதுகாப்பு, அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி, பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கான பாதுகாப்பு ஆகியவை அந்த நான்கு தூண்கள் என அவர் கூறினார். இவற்றின் மூலம் மக்களின் அன்றாட அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற்றப்பட்டு, உரிமைகள் பாதுகாக்கப்படுவதாக திரு பி.கே. மிஸ்ரா குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2201465®=3&lang=1
****
SS/PLM/SH
(रिलीज़ आईडी: 2201884)
आगंतुक पटल : 8