பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

யுனெஸ்கோ பாரம்பரிய கலாச்சாரப் பட்டியலில் தீபாவளிப் பண்டிகை சேர்க்கப்பட்டதற்கு பிரதமர் வரவேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 10 DEC 2025 12:20PM by PIB Chennai

யுனெஸ்கோ பாரம்பரிய கலாச்சாரப் பட்டியலில் தீபாவளிப் பண்டிகை சேர்க்கப்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சியையும், பெருமையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் யுனெஸ்கோவின் பதிவுக்கு திரு மோடி பதிலளித்திருப்பதாவது:

இந்தியா மற்றும் உலகிலுள்ள மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

எங்களைப் பொறுத்தவரைதீபாவளி எங்கள் கலாச்சாரம் மற்றும் நெறிமுறைகளுடன் மிகவும் நெருக்கமாக இணைந்துள்ளது. இது எங்களுடைய நாகரிகத்தின் ஆன்மாவாகும். இது ஒளியையும்,  நீதியையும் வெளிப்படுத்துகிறது. யுனெஸ்கோவின் பாரம்பரிய கலாச்சாரப் பட்டியலில் தீபாவளி சேர்க்கப்பட்டது, இப்பண்டிகை உலகளவில் மேலும் பிரபலமடைய வழிவகுக்கும்.

பிரபு ஸ்ரீ ராமரின் கொள்கைகள் என்றும் நம்மை வழிநடத்தட்டும்.

***

(Release ID: 2201323)

SS/IR/RJ/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2201732) வருகையாளர் எண்ணிக்கை : 54