பிரதமர் அலுவலகம்
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு பிரதமர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
02 DEC 2025 6:40PM by PIB Chennai
இன்று தொடங்கிய காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்த சிறப்பான நிகழ்ச்சி 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற உணர்வை ஆழப்படுத்துகிறது என்று அவர் கூறியுள்ளார். "காசியில் மகிழ்ச்சியோடும், பசுமையான நினைவுகளோடும் சங்கமம் நிகழ்ச்சிக்கு வருகை தருகின்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள்!" என்று திரு மோடி குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
“காசி தமிழ் சங்கமம் இன்று தொடங்கியுள்ள நிலையில், ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற உணர்வை ஆழப்படுத்தும் இந்த சிறப்பான நிகழ்ச்சிக்கு எனது நல்வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன். காசியில் மகிழ்ச்சியோடும், பசுமையான நினைவுகளோடும் சங்கமம் நிகழ்ச்சிக்கு வருகை தருகின்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள்!”
(Release ID: 2197770)
***
AD/BR/SH
(रिलीज़ आईडी: 2197896)
आगंतुक पटल : 6