பிரதமர் அலுவலகம்
நாகாலாந்து மாநிலம் உருவான தினத்தையொட்டி மக்களுக்கு பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
01 DEC 2025 3:21PM by PIB Chennai
நாகாலாந்து மாநிலம் உதயமான தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், புகழ் பெற்ற நாகா மக்களின் நாகரீகம், சேவை மனப்பான்மை, துணிச்சல் மற்றும் கனிவு போன்ற பண்புகள் பெரிதும் ஈர்க்கும் வகையில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். பல்வேறு துறைகளில் அம்மாநில மக்கள் தனித்துவ திறமை கொண்டவர்களாக உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இனி வரும் ஆண்டுகள் அம்மாநில மக்களின் வாழ்வில் வளர்ச்சி மற்றும் வளமையைக் கொண்டு வரட்டும் என்று பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“நாகாலாந்து மாநிலம் உருவான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். புகழ் பெற்ற நாகா மக்களின் கலாச்சாரம், சேவை மனப்பான்மை, துணிச்சல், கனிவு போன்ற பண்புகள் பெருமளவில் மக்களை ஈர்க்கக் கூடியவையாக உள்ளது. அம்மாநில மக்கள் அனைத்துத் துறைகளிலும் தனித்துவத் திறமை கொண்டவர்களாக உள்ளனர். வரும் ஆண்டுகள் அம்மாநிலத்திற்கு வளர்ச்சியும், வளமையையும் கொண்டு வரட்டும் என்று வாழ்த்துகிறேன்.
***
(Release ID: 2196882)
SS/SV/KPG/SH
(रिलीज़ आईडी: 2197188)
आगंतुक पटल : 7