பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பார்வையற்றோர் மகளிர் டி 20 உலகக் கோப்பையை வென்ற இந்தியப் பார்வையற்றோர் மகளிர் கிரிக்கெட் அணிக்குப் பிரதமர் வரவேற்பளித்தார்.

இடுகை இடப்பட்ட நாள்: 27 NOV 2025 10:03PM by PIB Chennai

அண்மையில் பார்வையற்றோர் மகளிர் டி 20 உலகக் கோப்பையை வென்ற இந்தியப் பார்வையற்றோர் மகளிர் கிரிக்கெட் அணிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வரவேற்பளித்தார். அந்த வீராங்கனைகளுடன் திரு மோடி அன்புடன் உரையாடிய போது போட்டித்தொடர் அனுபவங்களை அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது:

"பார்வையற்றோர் மகளிர் டி 20 உலகக் கோப்பையை வென்ற இந்தியப் பார்வையற்றோர் மகளிர் கிரிக்கெட் அணியை வரவேற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது! அவர்கள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். உண்மையில் அவை மிகவும் ஊக்கமளிப்பவையாக இருந்தன."

***

(Release ID: 2195659)

SS/SMB/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2195735) வருகையாளர் எண்ணிக்கை : 45