இந்தியா சர்வதேச திரைப்பட விழாவில் மீட்டெடுக்கப்பட்ட மௌனப் படம் 'முரளிவாலா' சிறப்புக் காட்சி
56-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில், தேசியத் திரைப்பட மேம்பாட்டுக் கழகம்) மற்றும் தேசியத் திரைப்பட ஆவணக் காப்பகம் ஆகியவை இணைந்து மீட்டெடுத்த கிளாசிக் திரைப்படமான 'முரளிவாலா’ வின் சிறப்புக் காட்சியைக் காண்பித்தன. இதன் மூலம் பார்வையாளர்கள் 1920களின் மௌனப் படக் காலத்தை மீண்டும் அனுபவித்தனர்.
தேசியத் திரைப்படப் பாரம்பரிய இயக்கத்தின் கீழ் மீட்டெடுக்கப்பட்ட 18 கிளாசிக் திரைப்படங்கள் (தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட) 'இந்தியன் பனோரமா சிறப்புப் பிரிவின் ஒரு பகுதியாகக் காட்சிப்படுத்தப்பட்டன.
1920களில் இருந்ததைப் போலவே, இசைக்கலைஞர் ராகுல் ராணடே மற்றும் அவரது குழுவினர் திரையரங்கில் அமர்ந்து படத்திற்கு நேரடி இசையை வழங்கியதுதான் இந்தச் சிறப்புக் காட்சியின் முக்கிய அம்சமாகும். தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் திரு. பிரகாஷ் மாக்தூம், இன்றைய தலைமுறைக்காக மௌனப் பட அனுபவத்தை மீண்டும் கொண்டு வருவதே இதன் நோக்கம் என்று விளக்கினார்.
பாபுராவ் பெயின்டர் 1927-இல் உருவாக்கிய ‘முரளிவாலா’ திரைப்படம், எஞ்சியிருக்கும் அரிய இந்திய மௌனப் பொக்கிஷங்களில் ஒன்றாகும். பாபுராவ் பெயின்டரின் மகள்களும் இந்தக் காட்சியில் கலந்துகொண்டனர். மேலும், இந்த ஆண்டின் விழா வி. சாந்தாராமின் 125வது பாரம்பரியத்தையும், குரு தத் உள்ளிட்ட ஆளுமைகளின் நூற்றாண்டு அஞ்சலிகளையும், தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் 50 ஆண்டு காலச் சேவையையும் கொண்டாடியது.
***
AD/VK/SH
Release ID:
2193809
| Visitor Counter:
3