பிரதமர் அலுவலகம்
பிரபல நடிகர் திரு தர்மேந்திரா மறைவுக்கு பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
24 NOV 2025 3:06PM by PIB Chennai
பிரபல நடிகர் திரு தர்மேந்திராவின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது இந்திய சினிமா சகாப்தத்தில் ஒரு முடிவு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தர்மேந்திரா ஒரு தனித்துவம் மிக்க திரைப்பட ஆளுமை என்றும், அவர் நடித்த அனைத்து கதாபாத்திரத்திலும் ஈர்ப்பையும், ஆழத்தையும் கொண்ட ஒரு அற்புதமான நடிகர் என்றும் பிரதமர் கூறியுள்ளார். பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்ற அவரது திறன் தலைமுறைகளைக் கடந்து எண்ணற்ற மக்களை வசீகரித்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:
“தர்மேந்திராவின் மறைவு இந்திய சினிமா சகாப்தத்தில் ஒரு முடிவு. அவர் ஒரு தனித்துவம் மிக்க திரைப்பட ஆளுமை, அவர் நடித்த அனைத்து கதாபாத்திரத்திலும் ஈர்ப்பையும், ஆழத்தையும் கொண்ட ஒரு அற்புதமான நடிகர். பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்ற அவரது திறன் தலைமுறைகளைக் கடந்து எண்ணற்ற மக்களை வசீகரித்தது.
எளிமை, பணிவு, அரவணைப்பு ஆகியவற்றிற்காகவும் தர்மேந்திரா போற்றப்படுகிறார். இந்த துயரமான தருணத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுடன் உள்ளது. ஓம் சாந்தி”.
***
(RELEASE ID 2193534)
SS/IR/LDN/SH
(रिलीज़ आईडी: 2193706)
आगंतुक पटल : 23
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam