பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரசாந்தி நிலையத்தில் உள்ள ஸ்ரீசத்ய சாய்பாபாவின் நினைவிடத்தில் பிரதமர் மரியாதை

प्रविष्टि तिथि: 19 NOV 2025 1:46PM by PIB Chennai

ஆந்திரப் பிரதேச மாநிலம் புட்டபர்த்தி சென்றடைந்த பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு, ஸ்ரீராம் என்ற மந்திர உச்சாடனத்துடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரசாந்தி நிலையத்தில் உள்ள சாய் குல்வந்த் மண்டபத்தில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நினைவிடத்தில் பிரதமர் மரியாதை செலுத்தினார். இதனையடுத்து ஓம்கார் மண்டபத்தில் அவர் வழிபாடு செய்தார். இந்த இடம் எல்லையற்ற கருணை மற்றும் மனிதகுல மேம்பாட்டிற்காக தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட ஸ்ரீசத்ய சாய் பாபாவின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீசத்ய சாய் பாபாவின் தன்னலமற்ற சேவைகள் குறித்த போதனைகள் தொடர்ந்து நம்மை வழிநடத்துவதாகவும், லட்சக்கணக்கான மக்களால் பின்பற்றி வருவதாகவும் கூறினார். விலங்குகளுக்கான நலவாழ்வு தொடர்பான அம்சங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் குறிப்பிடத்தக்க பணிகள் உட்பட பல்வேறு முக்கிய முன்முயற்சிகளை மேற்கொண்டு வரும் ஸ்ரீசத்ய சாய் மத்திய அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கோமாதா வழிபாட்டில் பிரதமர் பங்கேற்றார். இதன் ஒரு பகுதியாக விவசாயிகள் நாட்டு வகை இனமான கிர் வகை பசுக்கள் உட்பட பல்வேறு பசுக்களைத் தானமாக  வழங்கினர். சமூகத்தின் நலனுக்காக ஒவ்வொருவரும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும் ஸ்ரீசத்ய சாய் பாபாவின் போதனைகளைப் பின்பற்றும் அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் கூறினார்.

சமூக ஊடக எக்ஸ்  தளத்தில் பிரதமர் பிரத்யேகமாக வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“ஆந்திரப் பிரதேச மாநிலம் புட்டபர்த்தி சென்றடைந்ததும் அங்கு ஸ்ரீராம் என்ற மந்திர உச்சாடனத்துடன் தனக்கு சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.”

“பிராசாந்தி நிலையத்தில் உள்ள சாய் குல்வந்த் மண்டபத்தில் ஸ்ரீசத்ய சாய் பாபாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினேன். இதனையடுத்து ஓம்கார் மண்டபத்தில் தரிசனம் செய்தேன். இந்த இடம் மனிதகுல மேம்பாட்டிற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்து, எல்லையற்ற கருணையுடன் கூடிய அவரது தியாகத்தை நினைவு கூரும் வகையில் அமைந்துள்ளது. தன்னலமற்ற சேவையாற்ற வேண்டும் என்ற அவரது போதனைகள் தொடர்ந்து தம்மை வழிநடத்துவதுடன் லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது.”

“ஸ்ரீசத்ய மத்திய அறக்கட்டளை பல்வேறு சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருவதுடன் விலங்குகளின் நலனைக் கருத்தில் கொண்டும் செயல்பட்டு வருகிறது. இன்று கோமாதா வழிபாட்டின் ஒரு பகுதியாக விவசாயிகள் பசுக்களை வழங்கினர். குஜராத் மாநிலம் கிர் காடுகளில் உள்ள நாட்டு வகை பசுக்களின் படங்களை இங்கே காணலாம். ஸ்ரீசத்ய சாய் பாபாவின் வழிகாட்டுதலின் படி சமுதாய நலனைக் கருத்தில் கொண்டு நாம் அனைவரும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.”

 

***

(Release ID: 2191612)

VL/SV/KPG/KR


(रिलीज़ आईडी: 2191726) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Gujarati , Telugu , Kannada , Malayalam