பிரதமர் அலுவலகம்
பூட்டான் மன்னருடன் பிரதமர் சந்திப்பு
प्रविष्टि तिथि:
11 NOV 2025 6:14PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று திம்புவில் பூட்டான் மன்னர் மாண்புமிகு திரு ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சக்கை சந்தித்துப் பேசினார். இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். பரஸ்பர நலன் பயக்கும் பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர். தில்லி துயரத்தில் உயிரிழந்தவர்களுக்கு மன்னர் இரங்கல் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையே நட்பு மற்றும் ஒத்துழைப்பின் நெருங்கிய உறவுகளை வடிவமைப்பதில் அடுத்தடுத்து வந்த மன்னர்கள் முன்வைத்த வழிகாட்டும் தொலைநோக்குப் பார்வைக்கு பிரதமர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். பூட்டானின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு இந்திய அரசு அளித்த விலைமதிப்பற்ற ஆதரவிற்கு மன்னர் நன்றி தெரிவித்தார்.
தாஷிச்சோட்சோங்கில் உள்ள கிராண்ட் குயென்ரி மண்டபத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ள இந்தியாவிலிருந்து வந்த பகவான் புத்தரின் புனித பிப்ரஹ்வா நினைவுச்சின்னங்களின் முன் தலைவர்கள் இருவரும் பிரார்த்தனை செய்தனர். நான்காவது மன்னரின் 70-வது பிறந்தநாள் மற்றும் உலகளாவிய அமைதி மற்றும் மகிழ்ச்சிக்காக பூட்டான் ஏற்பாடு செய்த உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழாவுடன் திம்புவில் உள்ள புனித பிப்ரஹ்வா நினைவுச்சின்னங்களின் விளக்கக்காட்சி ஒத்துப்போகிறது.
1020 மெகாவாட் திறன் கொண்ட புனாட்சாங்சு-II நீர்மின் திட்டத்தைத் தலைவர்கள் கூட்டாகத் தொடங்கி வைத்தனர், இது இந்தியாவிற்கும் பூட்டானுக்கும் இடையிலான துடிப்பான மற்றும் வளர்ந்து வரும் பரஸ்பர நன்மை பயக்கும் எரிசக்தி கூட்டாண்மையில் ஒரு மைல்கல் ஆகும். இது இரு நாடுகளிலும் உள்ள சாதாரண மக்களின் வாழ்க்கைக்கு குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கியுள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மனநல சேவைகள் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் அவர்கள் பரிமாறிக் கொண்டனர். பூட்டானுக்கு எரிசக்தி திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக 4000 கோடி ரூபாய் கடன் உத்தரவாதத்தை இந்த நிகழ்வில், இந்திய அரசு அறிவித்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2188900
(Release ID: 2188900)
***
SS/BR/SH
(रिलीज़ आईडी: 2189027)
आगंतुक पटल : 20
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam