பிரதமர் அலுவலகம்
திம்புவில் பூடான் 4-வது மன்னரின் 70-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் தாம் உரை நிகழ்த்திய காட்சிகளை பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
11 NOV 2025 5:24PM by PIB Chennai
திம்புவில் இன்று நடைபெற்ற பூடான் 4-வது மன்னரின் 70-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் தாம் உரை நிகழ்த்திய காட்சிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது:
“தில்லியில் நேற்று மாலை ஏற்பட்ட பயங்கர கார் வெடிப்பு சம்பவம் அனைவருக்கும் ஆழமான வலியை ஏற்படுத்தியுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியா துணை நிற்கிறது.
ஒட்டுமொத்த சதித்திட்டத்தின் அடிஆழத்திற்கு விசாரணை முகமைகள் செல்லும் என்று அனைவருக்கும் நான் உறுதி கூறுகிறேன்.
இதில் ஈடுபட்ட அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்.”
“நான்காம் மன்னரின் 70-வது பிறந்த தின நிகழ்ச்சியில் பிரத்யேக பிரார்த்தனை மூலம் தில்லியில் நிகழ்ந்த வெடி விபத்து சம்பவத்தில் இந்திய மக்களுக்கு பூடான் மக்கள் உறுதுணையாக இருப்பதை வெளிப்படுத்தினார்கள். இந்நிகழ்வை நான் ஒரு போதும் மறக்கமாட்டேன்.”
“பூடானின் நான்காம் மன்னர் தேச தந்தையாகப் புகழப்படுகிறார். அவருடைய தொலைநோக்குப் பார்வை பூடானின் வளர்ச்சியின் புதிய உச்சத்தை உறுதி செய்துள்ளது.”
“இந்தியாவும், பூடானும் மிக ஆழ்ந்த இணைப்பை கொண்டுள்ளன, இதை நமது நாடுகளுக்கு இடையேயான பன்முக ஒத்துழைப்பில் காண முடிகிறது.”
“இந்தியாவும், பூடானும் எரிசக்தி, இணைப்பு ஆகிய இரு துறைகளில் ஆழமான ஒத்துழைப்பை கொண்டுள்ளன.”
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2188856
***
SS/SMB/IR/KPG/RK/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2188939)
வருகையாளர் எண்ணிக்கை : 52
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam