உள்துறை அமைச்சகம்
புதுதில்லியில் நடைபெற்ற தேசிய ஒற்றுமைதின நிகழ்ச்சியில் ஒற்றுமைக்கான ஓட்டத்தை உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா கொடியசைத்து தொடங்கிவைத்தார்
Posted On:
31 OCT 2025 1:08PM by PIB Chennai
தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி, உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று ஒற்றுமைக்கான ஓட்டத்தை புதுதில்லியில் தொடங்கிவைத்தார். இதனையடுத்து அங்கு திரண்டிருந்த மக்களிடையே ஒற்றுமைக்கான உறுதிமொழியேற்பையும் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் திரு மனோகர் லால், டாக்டர் மன்சுக் மாண்டவியா, தில்லி துணை நிலை ஆளுநர் திரு வி கே சக்சேனா, தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா, மத்திய உள்துறை இணையமைச்சர் திரு பண்டி சஞ்சய் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்நிகழ்சியில் உரையாற்றிய அமைச்சர் திரு அமித் ஷா, நம் அனைவருக்கும் இது சிறப்பான தினம் என்று கூறினார். கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31-ம் தேதி சர்தார் படேலுக்கு மரியாதை செலுத்தும் வகையில:, ஒற்றுமைக்கான ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். இன்று சர்தார் படேலின் 150-வது பிறந்த தினத்தைக் குறிக்கும் வகையில், நாடு முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் சர்தார் படேல் ஆற்றிய முக்கியப் பங்களிப்புக் குறித்து எடுத்துரைத்த திரு அமித் ஷா, தற்போதைய சுதந்திர இந்தியாவின் வரைபடத்திற்கு காரணியாக திகழ்ந்தவர் என்று குறிப்பிட்டார்.
வழக்கறிஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய சர்தார் வல்லபாய் படேல், மகாத்மா காந்தியின் அழைப்பின் பேரில், சுதந்திரப் போராட்ட இயகத்தில் தன்னை இணைத்துக் கொண்டதாக அவர் கூறினார். 1928-ம் ஆண்டு நடைபெற்ற பர்தோலி சத்தியாகிரக போராட்டத்தின் போது, அவரது தலைமைத்துவ பண்பு சான்றாக உள்ளது என்று அவர் கூறினார். விவசாயிகளுக்கு எதிராக அநீதி இழைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது. சர்தார் வல்லபாய் படேலின் தலைமையின் கீழ், விவசாயிகள் தங்களது போராட்டத்தைத் தொடங்கினர். சிறு நகரத்தில் தொடங்கிய இந்தப் போராட்டம், நாடு தழுவிய விவசாயிகள் போராட்ட இயக்கமாக உருவெடுத்து அவர்களது கோரிக்கையை ஆங்கிலேய அரசு ஏற்றுக் கொள்வதற்கான அழுத்தத்தை ஏற்படுத்தியது. இந்த இயக்கத்திற்கு பிறகு மகாத்மா காந்தி, வல்லபாய் படேலுக்கு சர்தார் என்ற பட்டத்தை வழங்கியதை திரு அமித் ஷா நினைவு கூர்ந்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2184518
***
SS/SV/KPG/SH
(Release ID: 2184821)
Visitor Counter : 7
Read this release in:
Khasi
,
English
,
Urdu
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam