பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் கடல்சார் மறுமலர்ச்சி குறித்த தொலைநோக்குப் பார்வையைப் பிரதமர் பகிர்ந்து கொண்டு, உலகளாவிய முதலீட்டை வரவேற்கிறார்

Posted On: 30 OCT 2025 3:15PM by PIB Chennai

கடல்சார் துறையில் முதலீடு செய்வதற்கான முன்னணி இடமாக இந்தியா உருவெடுப்பது குறித்து, LinkedIn –பக்கத்தில், பிரதமர் திரு. நரேந்திர மோடி தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். கடல்சார் துறையில் முதலீடு செய்வதற்கு இந்தியா சரியான இடம்  என்று அவர் வலியுறுத்தியுள்ளார். எங்களிடம்   மிக நீண்ட கடற்கரை உள்ளது. உலகத்தரம் வாய்ந்த துறைமுகங்கள் உள்ளன. எங்களிடம்   உள்கட்டமைப்பு, புதுமை மற்றும் எதிர்காலத்துக்கான நோக்கம் உள்ளது. வாருங்கள், இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் என்று திரு. மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியாவின்  இருப்பிடம், நவீன துறைமுக உள்கட்டமைப்பு, புதுமைக்கான அர்ப்பணிப்பு ஆகியவை கப்பல் கட்டுதல், துறைமுக செயல்பாடுகள், தளவாடங்கள், கடலோர கப்பல் போக்குவரத்து மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகளில் முதலீட்டாளர்களுக்கு மகத்தான வாய்ப்புகளை எவ்வாறு வழங்குகின்றன  என்பதை பிரதமர் தனது LinkedIn பக்கத்தில் விரிவான பதிவில் விளக்கிக் காட்டியுள்ளார்.

7,500 கி.மீ.க்கும் அதிகமான கடற்கரை மற்றும் உலகளவில் போட்டியிடும் துறைமுகங்களின் விரிவடையும் கட்டமைப்புடன், இந்தியா ஒரு முக்கிய கடல்சார் மையமாக மாறத் தயாராக உள்ளது.  இணைப்பு மட்டுமல்லாமல், மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள், பசுமை கப்பல் போக்குவரத்து முயற்சிகள் மற்றும் தொழில்துறைக்கு ஏற்ற கொள்கை கட்டமைப்புகளையும் அது வழங்குகிறது.

உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் "இந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள்" என்றும், வலுவான உள்கட்டமைப்பு, தெளிவான நோக்கம் மற்றும் வளர்ந்து வரும் புதுமை சுற்றுச்சூழல் அமைப்புகளால் ஆதரிக்கப்படும் நாட்டின் கடல்சார் வளர்ச்சிக் கதையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

LinkedIn-ல்  தமது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டுள்ள பிரதமர் பதிவிட்டுள்ளதாவது ;

“கடல்சார் துறையில் முதலீடு செய்வதைப் பொறுத்தவரை இந்தியா சரியான இடம் .

எங்களிடம் மிக நீண்ட கடற்கரை உள்ளது.

எங்களிடம் உலகத் தரம் வாய்ந்த துறைமுகங்கள் உள்ளன.

எங்களிடம் உள்கட்டமைப்பு, புதுமை மற்றும் நோக்கம் உள்ளது.

வாருங்கள், இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்!

@LinkedIn இல் சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டேன்.”

***

AD/PKV/SH


(Release ID: 2184403) Visitor Counter : 5