பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

காஸா அமைதி ஒப்பந்தத்தில் எகிப்து அதிபர் திரு சிசியின் முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்

Posted On: 17 OCT 2025 4:23PM by PIB Chennai

எகிப்து வெளியுறவு அமைச்சர் டாக்டர் பார்டு அப்டலட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். காஸா அமைதி ஒப்பந்தத்தில் எகிப்து அதிபர் திரு சிசி முக்கிய பங்காற்றியுள்ளதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துக் கொள்வதாக வெளியுறவு அமைச்சரிடம் கூறினார்.

இதன் மூலம் அமைதியை இழந்து தவிக்கும் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அவரது இந்தப் பயணத்தின் போது இந்தியா – எகிப்து நாடுகளிடையே முதலாவது உத்திசார் பேச்சுவார்த்தைக் குறித்து பிரதமர் திரு மோடியிடம் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் அப்டலட்டி விளக்கிக் கூறினார்.

பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் வர்த்தகம், தொழில்நுட்பம், எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் மக்கள் தொடர்பு போன்ற துறைகளில் பரஸ்பரம் நலன் காக்கும் விஷயங்கள் குறித்து பிரதமர் திருப்தி தெரிவித்தார்.

***

(Release ID:2180354)

SS/SV/KPG/SH


(Release ID: 2180545) Visitor Counter : 8