பிரதமர் அலுவலகம்
வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இலக்குகளை எட்டும் பயணத்தில் நீர்வழிப் போக்குவரத்தின் பங்களிப்பு குறித்தக் கட்டுரையை பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்
Posted On:
17 OCT 2025 1:16PM by PIB Chennai
நீர்வழிப் போக்குவரத்துக்கான தொலைநோக்குப் பார்வை குறித்தும், வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இலக்குகளை எட்டும் பயணத்தில் நீர்வழிப் போக்குவரத்து எவ்வாறு பங்களிக்கிறது என்பது குறித்தும் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் எழுதியுள்ள கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்து கொண்டுள்ளார். இந்தியாவில் உள்ள நதிகள் பாரம்பரிய சின்னமாக மட்டுமின்றி, மிகப் பெரிய நீர்வழிப் போக்குவரத்துக்கான உத்வேகமாக திகழ்கிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் வெளியிட்டுள்ள பதிவிற்கு பதில் அளித்துள்ள பிரதமர் திரு மோடி கூறியிருப்பதாவது:
இந்தியாவில் உள்ள நதிகள் பாரம்பரிய சின்னமாக இருப்பதுடன் நீர்வழிப் போக்குவரத்துக்கான உத்வேகமாக திகழ்கிறது. இது வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான பயணத்தில் எவ்வாறு பங்களிக்கிறது என்பது குறித்தும் நதிகளை புனரமைப்பது குறித்தும் மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனாவாலின் தொலைநோக்குப் பார்வை குறித்து அவர் எழுதியுள்ள கட்டுரையில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
சரக்குப் போக்குவரத்து, சுற்றுலா, உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை வரும் ஆண்டுகளில் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்தக் கட்டுரையைப் படிப்பதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.”
***
(Release ID: 2180254 )
SS/SV/KPG/SH
(Release ID: 2180536)
Visitor Counter : 6
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali-TR
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam