பிரதமர் அலுவலகம்
நானாஜி தேஷ்முக் பிறந்தநாளில் பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்
லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் மீதான நானாஜி தேஷ்முக்கின் மரியாதையையும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான அவரது தொலைநோக்குப் பார்வையையும் பிரதமர் நினைவுகூர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
11 OCT 2025 9:58AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, நானாஜி தேஷ்முக்கின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். தொலைநோக்கு பார்வை கொண்ட சமூக சீர்திருத்தவாதி, தேசத்தைக் கட்டியெழுப்பியவர், தற்சார்பு அடையவும் கிராமப்புற அதிகாரமளிப்பிற்காகவும் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் என்று பிரதமர் அவருக்குப் புகழாரம் சூட்டியியுள்ளார். நானாஜி தேஷ்முக்கின் வாழ்க்கை, அர்ப்பணிப்பு, ஒழுக்கம், சமூகத்திற்கான சேவை ஆகியவற்றின் உருவகமாக இருந்தது என்று பிரதமர் கூறியுள்ளார்.
லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயணிடமிருந்து நானாஜி தேஷ்முக் பெற்ற ஆழ்ந்த உத்வேகத்தையும் பிரதமர் எடுத்துரைத்துள்ளார். ஜே.பி. மீது நானாஜி மரியாதை வைத்திருந்தார். இளைஞர் மேம்பாடு, சேவை, தேசக் கட்டுமானத்திற்கான அவரது தொலைநோக்குப் பார்வை ஆகியவை ஜனதா கட்சியின் பொதுச் செயலாளராக அவர் இருந்த காலத்தில் அவரது செயல்பாடுகளில் பிரதிபலித்தது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எகஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள தொடர் பதிவுகளில் கூறியிருப்பதாவது:
"நானாஜி தேஷ்முக்கின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவர் ஒரு தொலைநோக்குடைய சமூக சீர்திருத்தவாதி, தேசத்தைக் கட்டியெழுப்பியவர், மக்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் கிராமப்புற அதிகாரமளிப்பிற்காகவும் வாழ்நாள் முழுவதும் வாதிட்டவர். அவரது வாழ்க்கை அர்ப்பணிப்பு, ஒழுக்கம், சமூகத்திற்கான சேவை ஆகியவற்றின் உருவகமாக இருந்தது."
"லோக்நாயக் ஜே.பி.யால் நானாஜி தேஷ்முக் மிகவும் ஈர்க்கப்பட்டார். ஜே.பி. மீதான அவர் மரியாதை வைத்திருந்தார். இளைஞர் மேம்பாடு, சேவை, தேசக் கட்டுமானம் ஆகியவற்றில் அவரது தொலைநோக்குப் பார்வை அவர் ஜனதா கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தபோது பிரதிபலித்தது."
***
(Release ID: 2177686)
AD/PLM/RJ
(रिलीज़ आईडी: 2177832)
आगंतुक पटल : 22
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam
,
Malayalam