பிரதமர் அலுவலகம்
வி கே மல்ஹோத்ரா மறைவையொட்டி பிரதமர் அவரது இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
30 SEP 2025 2:21PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, மறைந்த வி கே மல்ஹோத்ராவின் இல்லத்திற்கு சென்று இன்று அஞ்சலி செலுத்தினார். அன்னாரது குடும்பத்தினருக்கும் அவர் இரங்கல் தெரிவித்தார்.
வி.கே. மல்ஹோத்ராவின் பங்களிப்பு குறித்து நினைவுகூர்ந்த பிரதமர், தில்லியின் வளர்ச்சிக்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள் என்றும் போற்றப்படும் என்று கூறினார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“மறைந்த வி கே மல்ஹோத்ராவின் இல்லத்திற்கு சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினேன், அவரது குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்தேன். தில்லியின் வளர்ச்சி மற்றும் எங்களது கட்சியின் சிறந்த நிர்வாகத்திற்கான அவரது பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும்.”
***
(Release ID: 2173068)
SS/IR/AG/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2173144)
வருகையாளர் எண்ணிக்கை : 30
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam